மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் டிட்டோஜாக் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நடத்திய 40 நிமிட பேச்சுவார்த்தை விபரம்.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 16, 2022

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் டிட்டோஜாக் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நடத்திய 40 நிமிட பேச்சுவார்த்தை விபரம்..

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்)

நேற்று 15.05.2022(ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.00 மணிக்கு திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் சட்ட மன்ற அலுவலகத்தில் பேச்சுவார்த்தை தொடங்கியது.  ஆறு சங்கங்களின் பொதுச் செயலாளர்களும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் தொடக்கக் கல்வியை சீரழித்து வருகிற அரசாணை எண்: 101,108 ஐ உறுதியாக ரத்து செய்து அறிவித்திட வேண்டும். ஆணையர் பதவியை விடுவித்துவிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு களையப்பட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். நிதி ஆதாரம் இல்லாத அரசாணை எண்:101,108 உடன் ரத்து செய்து அறிவித்திட வேண்டும். ஆணையர் பதவியை உடனடியாக விடுவித்திட  வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார்கள். அமைச்சர் அவர்கள்  உத்தரப்பிரதேச கல்வி முறையினை எப்படி தமிழ்நாட்டில் புகுத்தினார்கள்? என்று அலுவலர்களிடம் கேட்டேன். அவர்கள் விளக்கம் சொன்னார்கள். நானும் ரத்து செய்வதில்  தீவிரமாக உள்ளேன். இருப்பினும் தடை ஏற்பட்டு வருகிறது என்றார்.இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை தொடர்பு கொண்டு அரசாணை எண்:101,108 இரத்து செய்யப்பட வேண்டும் என்று அனுமதி கேட்டு  நிச்சயம் அறிவித்து விடுகிறேன். ஒருவேளை அறிவிப்பு இல்லை என்றால், போராட்டம் நடத்துவது பற்றி  நீங்கள் முடிவு செய்யுங்கள் என்று தெரிவித்தார்.

அமைச்சர் அவர்களுடைய பேச்சுவார்த்தைக்கு பின்பு டிட்டோஜாக் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அமர்ந்து பேசி ஒரு தெளிவான முடிவினை எடுத்துள்ளோம். மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடைய வெளிப்படைத் தன்மையான பேச்சு வார்த்தையின் மீது நம்பிக்கை வைத்து 18.5.2022 அன்று  மாவட்டத் தலைநகரில் நடத்தப்பட இருந்த ஆர்ப்பாட்டமானது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. ஒருவேளை 18ஆம் தேதிக்குள் அறிவிப்பு வரவில்லை என்றால் உடன் டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தினை நடத்தி உடன்  தேதியை அறிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முழு கவனத்தையும் ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தினை  மாவட்டத் தலைநகரங்களில் நடத்துவது என  என்பதை உறுதியாக முடிவெடுத்து அறிவித்துள்ளோம்.

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடைய பேச்சுவார்த்தையில் அவரது எதார்த்த நடைமுறையினை ஒளிவுமறைவின்றி எடுத்து வைத்துள்ளார். உயர் அலுவலர்கள் மட்டத்தில் தடையாக உள்ளது என்பதையும் எடுத்து கூறினார். அதுமட்டுமல்லாமல் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்பதற்கான  பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாகவும்  தெரிவித்துள்ளார்.

அரசாணை 101,108 ரத்தாகி விரைவில் ஆணை  வெளியிடப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. அதை வெளியிடுவதில் தாமதம் ஆனால் வலுவான ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். உங்களுடைய உறுதியான ஒத்துழைப்பு கோரிக்கைகளை உறுதியாக வென்றெடுக்கும்.

திட்டமிட்டபடி 14.5.2022 அன்று மாவட்ட தலைநகரங்களில் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தை கூட்டி ஆர்ப்பாட்டம் வலுப்பெற முடிவெடுத்து அறிவித்துள்ள இணைப்பு சங்கங்களின் மாவட்ட பொறுப்பாளர்களை டிட்டோஜாக் மாநில அமைப்பின் சார்பில் உளமாற பாராட்டுகிறோம். வாய்ப்பு வரும்போது தொடரட்டும் உங்களின் போர்க்களப்பணி..

ஓங்கட்டும்!! ஓங்கட்டும்!! டிட்டோஜாக் இணைப்பு சங்கங்களின் ஒற்றுமை ஓங்கட்டும்!!

டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழுவிற்காக.!

19 comments:

  1. மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடைபெறுவது தொடர்பாக ஏதும் முடிவு செய்தீதர்களா?தெரியப்படுத்துங்கள்

    ReplyDelete
    Replies
    1. அது பற்றி அவர்களுக்கு எதுக்கு கவலை

      Delete
    2. மாவட்டம் விட்டு மாவட்டம் மனமொத்த மாறுதல் நடைபெற்றவர்களுக்கே இன்னும் 20/நாளாகியும் ஆணை வழங்ப்படவில்லை

      Delete
  2. Please extend the age limit for teachers to 57 years as previous.

    ReplyDelete
  3. மாவட்ட மாறுதல் நடைபெற உடனடியாக வழி காணுங்கள்.இல்லையேல் போராடி நடத்தப்பட வேண்டிய. சூழல் ஏற்படும்.அது அரசுக்கும் கலங்கம்.ஆசிரியர் சங்கங்களுக்கும் இயலாத்தன்மை.
    இயல்பாக நடக்க வேண்டிய கலந்தாய்வை கூட நடத்த முடியாத நிலை.என்ன சொல்வது.

    ReplyDelete
  4. கைக்கூலி சங்கங்கள்

    ReplyDelete
  5. தொடக்க கல்வி மாவட்ட மாறுதல் நடைபெறுமா டிட்டோஜாக் தலைவர்களே பதில் கூறுங்கள்.....எளிமையாக நடத்த வழி யுள்ள இதையே நடத்த நீங்கள் வழி உருத்தவில்லை....பிறகு என்ன தேவையில்லாத கட்டு கதைகளை கூறுகிறீர்கள்

    ReplyDelete
  6. மாவட்ட மாறுதல் விண்ணப்பித்த அனைத்து ஆசிரியர்களும் தங்கள் கருத்துக்களை பதிவிடுங்ள்.அப்போதுதான் ஒரு வழி பிறக்கும்.தாமதிக்க வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. Muthinila sir, சங்கவாதிகள் எல்லாம் அதிகார வர்கத்தின் கைபாவைகள்....அவர்கள் நமது மாவட்ட மாறுதல் கலந்தாய்வு பற்றி வாய் திறக்க மாட்டார்கள்......சந்தா 300 ரூபாய் மட்டும் தான் அவர்களுக்கு வேண்டும்...

      Delete
  7. தொடக்கக் கல்வி மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடத்த வேண்டும்....மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளோம்.....

    ReplyDelete
  8. ஆச்சரியமாக உளளது இந்த சங்க பொறுப்பாளர்கள் இதை பற்றி உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து செல்லாதது.....DEE மாவட்ட மாறுதல் பற்றி

    ReplyDelete
  9. மாவட்ட மாறுதல் பற்றி அவர்களுக்கு என்ன கவலை. அவர்கள் ஒன்றியத்திற்குள் அல்லது ஒன்றியம் விட்டு ஒன்றியம் நடக்காமல் இருந்திருந்தால் உடனே போராட்டம் நடத்தி இருப்பார்கள். நாம் வெளி மாவட்டம் தானே நமக்காக கேட்பார் (போராடுபவர்கள்) இங்கே யாரும் இல்லை. எல்லாம் பணம் வாங்கும் வரைதான்.

    ReplyDelete
  10. இந்த மே மாதம் சென்னையில் போராட்டம் நடத்தி நாமே நடக்க வைத்தால் தான் உண்டு சங்கத்தை நம்பினால், கடைசிவரை வெளிமாவட்டம் தான் நமது கஷ்டம் நமக்கே தெரியும்

    ReplyDelete
  11. அனைத்து ஆசிரிய நண்பர்களே சங்கங்கள் நமக்காக குரல் எழுப்பது......தொடக்கக் கல்வி மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடைபெற நாம் தான் போராடவேண்டும்.....சங்கங்கள் நம்மிடம் சந்தா மட்டுமே பிடுங்கி அவர்களுக்கு தேவையானதை மட்டுமே நிறைவேற்றிக்கொள்ள கூடியவர்கள்.....சங்கணவது ........

    ReplyDelete
    Replies
    1. ஐபெட்டோ தலைவர் இதை பத்தி ஒன்றும் சொல்லவில்லை.....அரசே நடத்த தேதி அறிவிப்பதற்கு ஒரு நாள் முன்னாடி தான் சங்கங்கள் ஆக்டிவா இருப்பார்கள்....நான் தான் அமைச்சரிடம் பேசினேன்....இயக்குனரிடம் பேசினேன் என உலருவார்கள்....

      Delete
    2. மிக சரியான கருத்து.அவர்களுக்கு வழக்கமான ஒன்றுதானே....

      Delete
  12. நமக்கான வேதனைக்கு நாமே தீர்வு காண்போம்.
    நமக்கான வழியை நாமே தேடுவோம்.
    ஒன்று படுவோம்.அணி சேருவோம்.
    தொடக்கநிலை மாவட்ட மாறுதல் நடைபெற போராடுவோம்.வெற்றி காண்போம்.

    ReplyDelete
  13. MIRTHIKA COACHING CENTRE... TV MALAI.. UG TRB ENGLISH Study materials available for tet paper 2 passed candidates..10 books for 10 units... all topics are covered.. 1200 questions free..materials will be sent by courier.. contact 7010520979

    ReplyDelete
  14. 10 வருட காலம் கடந்த பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக தேர்தல் வாக்குறுதியில் கூறிய முதல்வர் பின் வாங்குவது கவலையை தருகிறது.🙄🙄🙄🙄🙄😢😢😔😔😷😷🙏🙏

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி