ஆசிரியர்களும் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள் - விழியன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 31, 2022

ஆசிரியர்களும் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள் - விழியன்

வே.வசந்தி தேவி எழுதிய இளைஞர்களுக்கு துரோகம் செய்துவிட்டோம் ' என்ற  கட்டுரையின் ( 30.05.22 ) பேசுபொருள் முக்கியமானது. ஆனால் , அணுகுமுறையில் முரண் தென்படுகின்றது.

1. இந்தக் கட்டுரையில் ஆசிரியர்கள்தான் குற்றவாளிகள் என்ற தொனி மேலெழுகிறது. கிட்டத்தட்ட எல்லா ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களிடம் இந்த கரோனா காலகட்டத்தில் பேசினார்கள் ; தொடர்பில் இருந்தார்கள் ; எப்படி இருக்கிறார்கள் என விசாரிக்கவும் செய்தார்கள். விகிதாச்சாரத்தில் மாறுபாடு இருக்கலாம். எல்லா மாணவர்களிடமும் ஆசிரியரின் கைபேசி எண் இருந்தது ( வாட்ஸ்அப் குழுவில்தானே செய்தி கொடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியிருந்தது ). ஆனால் , இது ஒரு சமூகக் கடமை , ஒட்டுமொத்த சமூகமும் சேர்ந்து மாணவர்களைக் கைப்பிடித்துத் தூக்க வேண்டும் , துயரிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். ஆசிரியர்கள் அவர்களின் தொடர்பில் இருக்கும் மிகப் பெரிய ஆயுதம்.

2. கரோனா காலகட்டத்துக்குப் பின்னர் , பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் குழந்தைகளுடன் உரையாடுவதற்கு ஆசிரியர்களுக்கு அவகாசம் இருந்ததா ? அவகாசம் கொடுக்கப்பட்டதா ? அவர்கள் பெரும்பாலான நேரம் , அரசுக்குத் தகவல்கள் , தரவுகள் திரட்டுபவர்களாகத்தானே இருந்தார்கள் . கற்றல் - கற்பித்தலுக்குக் குறைந்த நேரமே கிடைத்தது . கட்டுப்பாடுகள் , சுழற்சி முறையில் வகுப்பறைகள் என வழக்கத்தைவிடக் கூடுதல் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன.

3. என்ன செய்ய வேண்டும் என்பதற்குப் பள்ளிக்கு இரண்டு ஆசிரியர்களுக்கு மனநல ஆலோசனைப் பயிற்சி தர வேண்டும் என்று சொல்கிறது கட்டுரை . பயிற்சி மட்டுமல்ல , உண்மையில் எல்லா ஆசிரியர்களுக்குமே மனநல ஆலோசனைகள் தேவை அவர்களுமே அழுத்தத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்குமே கரோனா காலகட்டம் சிக்கல்களைக் கொடுத்துள்ளது . குழந்தைகளுக்கும் மனநல ஆலோசகர்கள் தேவை பயிற்சி பெற்ற முழு நேர மனநல ஆலோசகர்களே இதற்குத் தீர்வாக அமைய முடியும். கரோனா காலகட்டம் கொடுத்த அழுத்தத்துக்கு மட்டுமல்ல , இனி வழக்கமான நாட்களுக்கும் தேவை . இதற்கான முன்னெடுப்புகள் இனியாவது தொடங்கப்பட வேண்டும் . இது கல்வி கற்பதற்கும் கற்பிப்பதற்கும் அவசியம் , பள்ளிக்கு இரண்டு நாட்கள் என மூன்று பள்ளிகளுக்கு ஒரு ஆலோசகர் என்று நியமிக்கலாம். அல்லது மாணவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும் தீர்மானிக்கலாம். மீண்டும் ஆசிரியர்களையே இதில் பணித்து , இன்னும் சுமையைக் கூட்டி , திரும்பவும் அவர்களை இதைக்கூடச் செய்ய மாட்டீர்களா எனக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிடக் கூடாது. துரோகம் இழைக்கப்பட்டதா எனில் , இது ஒரு விபத்து , இதை யாரும் ஊகிக்கவில்லை . இச்சூழலில் , ஆசிரியர்கள் என்ற ஒரு அங்கத்தினரை மட்டுமே குற்றவாளிகளாக்கி , அவர்கள் மூலமே தீர்வுகாண வேண்டும் என்பதை விடுத்து , ஒரு சமூகமாக எப்படி இதனைக் களைவது என்றே அணுக வேண்டும்.

 - விழியன் , சிறார் எழுத்தாளர் . தொடர்புக்கு : umanaths@gmail.com

3 comments:

  1. எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குற்றம் சொல்வது தற்போது பேஷனாகி விட்டது. கொரோனா காலத்திலும் சரி கொரோனா முடிந்து மக்கள சற்றே இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள இக்காலத்திலும் சரி, மாணவர்கள் என்றுமே மன அழுத்தத்தில் இருக்கவில்லை. மிகவும் ஜாலியாக , எந்த ஒரு பொறுப்புணர்வும் இன்றி அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியாகவே உள்ளனர். இதில் தினம் தினம் செத்து சுண்ணாம்பு ஆவது தனியார்ப் பள்ளி ஆசிரியர் தான்.

    இக்காலகட்டத்தில் தனியார்ப்பள்ளி ஆசிரியர்கள் அனுபவிப்பது வரலாற்றுத் துயரம்.

    ReplyDelete
  2. நல்ல ஆசிரியர்கள் தானே இதற்கெல்லாம் வருத்தப்படுவார்கள். நமக்கென்ன என்று பல்லைக் காட்டும் அரசுப் பள்ளி இழிகுறி ஆசிரியர்கள் கொழுத்த குண்டச்சிகள் இதையெல்லாம் கண்டுக்க மாட்டாங்க.

    ReplyDelete
  3. mirthika coaching centre.. tv malai.. ug trb english study materials available.10 books for 10 units...2000 pages...books will be sent by courier...contact 7010520979..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி