பொதுத்தேர்வில் பிட் பேப்பர்கள் : தேர்வு பணியில் ஈடுபட்ட அனைவரும் கூண்டோடு விடுவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2022

பொதுத்தேர்வில் பிட் பேப்பர்கள் : தேர்வு பணியில் ஈடுபட்ட அனைவரும் கூண்டோடு விடுவிப்பு!

11 அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு பணியில் இருந்து நீக்கம் செய்து தேர்வுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 5-ந் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 200 பள்ளிகளை சேர்ந்த 9 ஆயிரத்து 729 மாணவர்கள், 10 ஆயிரத்து 138 மாணவிகள், 472 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதி வருகின்றனர்.

தேர்வை கண்காணிக்க அரசு தேர்வுகள் துறை இணை இயக்குனர் பொன்குமார் தலைமையில் 120 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளிலுள்ள அரசு பொது தேர்வு மையங்களில் மாணவ,மாணவிகள் காப்பி அடிக்க மறைத்து வைத்திருந்த 5 கிலோ பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இந்த விவகாரம் தேர்வுத்துறை மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

இந்நிலையில் 11 அறை கண்காணிப்பாளர்கள் கூண்டோடு தேர்வு பணியில் இருந்து நீக்கம் செய்து தேர்வுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

4 comments:

  1. MIRTHIKA COACHING CENTRE..TV MALAI..UG TRB ENGLISH STUDY MATERIALS AVAILABLE FOR TET PAPER 2 PASSED CANDIDATES.. 10 BOOKS FOR 10 UNITS ..2000 PAGES... MATERIALS WILL BE SENT BY COURIER.. 1200 QUESTIONS FREE... CONTACT 7010520979...
    Reply

    ReplyDelete
    Replies
    1. Yaamba govt eh summairukkuthu neenga Vera ug trb nu ......pongappa

      Delete
  2. பொதுத்தேர்வில் ஹால் சூப்பர்வைசர்களே மாணவர்களை பார்த்து எழுத அனுமதிப்பதும், ஒரு மதிப்பெண் வினாவினை கேட்டு எழுத அனுமதிப்பதும் நடக்கிறது.

    தற்போது செய்முறைத் தேர்வில் செய்முறை ஏதும் செய்யாமலேயே பார்த்து எழுதிக் கொடுப்பது என்பது வழக்கமான நடைமுறை ஆகி விட்டது. பொதுத்தேர்வும் பார்த்து எழுதக்கூடிய ஒரு தேர்வாக ஆகிவிடும் அபாயம் இருக்கிறது.

    பெரிய தனியார்ப் பள்ளிகளில் இதற்கென்றே சீப்களுக்கு பெரிய பெரிய " கவர்கள் " கைமாறுவதும் நடக்கிறது.

    பள்ளிகளில் நடக்கும் முறைகேடுகளில் இருந்து தான் ஒரு சமுதாயத்தின் வீழ்ச்சி ஆரம்பமாகின்றது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி