முதுநிலை நீட் தேர்வு தேதி ஒத்தி வைக்க கோரி கடிதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 15, 2022

முதுநிலை நீட் தேர்வு தேதி ஒத்தி வைக்க கோரி கடிதம்

 வரும் 21ல் நடக்கவுள்ள முதுநிலை மருத்துவப் படிப்புக்கான, நீட் நுழைவுத் தேர்வை ஒத்திவைக்குமாறு, மத்திய சுகாதாரத் துறையிடம் இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து, ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:

கடந்த 2021ல், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு, திட்டமிட்ட தேதியை விட ஐந்து மாதங்கள் தாமதமாக நடந்தது. இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருந்தபடியால், கலந்தாய்வும் தாமதமானது.

பல்வேறு மாநிலங்களில், 2021ம் ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் இம்மாத மத்தியில் தான் முடிவடைகிறது. இந்நிலையில், 2022ம் ஆண்டுக்கான முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, 21ல் நடக்கவுள்ளது. கடந்த ஆண்டு கலந்தாய்வு மற்றும் நடப்பாண்டுக்கான தேர்வுக்கு இடையே கால அவகாசம் குறைவாக உள்ளது.

கடந்த ஆண்டில் தேர்வாகாமல் தவறியவர்கள், நடப்பாண்டு தேர்வுக்கு தயாராக போதிய அவகாசம் அளிக்கப்படவில்லை. எனவே, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு தேதிகளை, டாக்டர்கள் நலன் கருதி ஒத்திவைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி