தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இனி சனிக்கிழமை வகுப்புகள் கிடையாது? வலுக்கும் கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2022

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இனி சனிக்கிழமை வகுப்புகள் கிடையாது? வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் இந்த ஆண்டு கொரோனா காரணமாக தாமதமாகவே கல்வியாண்டு தொடங்கப்பட்டது. அதனால் வாரத்தில் 6 நாட்கள் வரை வகுப்புகள் நடைபெற்றது. இந்த கல்வியாண்டு ஜூன் 20க்குள் தொடங்கப்பட வேண்டும் என்றும் சனிக்கிழமைகளில் வகுப்புகள் வேண்டாம் என்றும் ஆசிரியர்கள் சங்கம் அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்துள்ளனர்.


பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் சரிவர இயங்கவில்லை. அத்துடன் கொரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வியாண்டும் தாமதமாக தொடங்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் நேரடி வகுப்புகள் தொடங்கியது. இந்த நிலையில் தமிழகத்தில் 3ம் அலையின் தாக்கம் தொடங்கியதால் பள்ளிகள் ஜனவரி மாதம் முழுவதும் மூடப்பட்டது.


அதன் பின்பு கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனால் குறைவான நாட்களே நேரடி வகுப்புகள் நடைபெற்றதால் பொதுத்தேர்வுக்கான பாடங்களை முடிக்க வாரத்தில் 6 நாட்களுக்கு பள்ளி வகுப்புகள் நடைபெற்றது. இது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மனச்சுமையை அதிகப்படுத்தியது. அதனால் நடப்பு கல்வியாண்டு விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் சார்பாக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


மேலும் கோரிக்கையில், இந்த கல்வியாண்டு தாமதமாக தொடங்கப்பட்டதால் வாரத்திற்கு 6 நாட்கள் பள்ளி வேலைநாளாக நடைபெற்றது. இது மாணவர்களுக்கு கூடுதலான மனச்சுமையாக இருந்தது. அதனால் வரும் கல்வியாண்டை வருகிற ஜூன் 20ம் தேதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க வேண்டும். அத்துடன் சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும் மற்றும் பாடங்களை குறைக்காமல் முழுவதுமாக நடத்த முன்கூட்டியே பள்ளிகளை திறக்க வேண்டும் என்று உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்துள்ளனர்.

11 comments:

  1. பள்ளியை இயங்கவில்லை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது அப்படி இருக்கும் பொழுது சனிக்கிழமை பற்றி எந்த ஆசிரியர் கவலைப்பட்டார் என்று தாங்கள் புதிய கதையை வடிவமைத்து பதிவு செய்துள்ளீர்கள். பரபரப்பாகச் செய்தி ஏதும் கிடைக்கவில்லை என்றால் தாங்களாகவே ஒரு கற்பனை காவியத்தை வடிவமைத்து விடுவீர்களா...?

    ReplyDelete
  2. MIRTHIKA COACHING CENTRE.. TV MALAI. UG TRB ENGLISH STUDY MATERIALS AVAILABLE FOR TET PAPER 2 PASSED CANDIDATES...10 books for 10 units with sample questions... totally 2000 pages...1200 questions free.. the price of material is 8700 at present... after notification the price will be 10000... grab the offer..we can challenge that this is the best study materials in the state... contact 7010520979..

    ReplyDelete
  3. எவன் கேக்குறான்? அவன் பேர சொல்லுய்யா

    ReplyDelete
  4. நாளைக்கு தேதி 25.05.22 அமைச்சர் தொடக்கக் கல்வி மாவட்ட மாறுதல் கலந்தாய்வு பற்றி வாய் திறக்க வாய்ப்புள்ளதா நண்பர்களே

    ReplyDelete
  5. நாளை மாவட்ட மாறுதல் நடைபெறுவதற்கான தேதி அறிவிக்கப்பட வேண்டும்.இலையேல் நம் போராட்ட தேதியை நாம் அறிவிப்போம்.

    ReplyDelete
  6. நடந்து முடிந்த கலந்தாய்வுகள் இயல்பாக நடந்தது.தொடக்கநிலை கலந்தாய்வுக்கு செய்தியாளர் சந்திப்பு, தேதி அப்படி இப்டின்னு காலந்தான் கடக்குது.இந்த வாரத்துக்குள் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட வேண்டும். கலந்தாய்வு தள்ளிப்போவதால் ஆசிரியர்கள் மட்டும் பாதிக்கப்படுவதோடு அவர்களின் குடும்பம் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர்.
    எனவே கலந்தாய்வு உடனே நடைபெறுதல் வேண்டும்.

    ReplyDelete
  7. எந்த விடுமுறையும் வேணா.
    ஜூன்13ஆம் தேதி பள்ளிக்கூடத்த திறந்துவிடுங்க.

    ReplyDelete
    Replies
    1. சொன்னவனுக்கு புரியும் ஜூன்13..நன்றி...

      Delete
  8. கர்த்தரை நம்புங்கள்.. ஸ்தோத்தரியுங்கள். அல்லேலுயா துதி பாடுங்கள்..
    சனிகிழமை விடுமுறை எனும் சாத்தானை வெல்ல ஜெபியுங்கள். அல்லேலுயா ஆமென் ஆண்டவரே.

    ReplyDelete
  9. Private school Kum ipdi order pota parava illa

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி