இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு மூன்றாவது கையேடு . சுவரொட்டிகள் , அட்டைகள் வழங்க சிறப்பு பணி அலுவலர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 24, 2022

இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு மூன்றாவது கையேடு . சுவரொட்டிகள் , அட்டைகள் வழங்க சிறப்பு பணி அலுவலர் உத்தரவு.

இல்லம் தேடிக் கல்வி மையங்களில் ஜுன் ஒன்று முதல் மூன்றாவது கையேடு . சுவரொட்டிகள் , அட்டைகளை பெற்று தன்னார்வலர்கள் மையங்களை நடத்திட சிறப்பு பணி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கான வழங்கப்பட்டுள்ள கட்டகங்கள் , சுவரொட்டிகள் , அட்டைகள் மற்றும் கதை புத்தகங்கள் மையங்களுக்கு வழங்குவதற்கான வழிக்காட்டுதல் :

 

கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி / இழப்பினை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் " இல்லம் தேடிக் கல்வி " அனைத்து மாவட்டங்களிலும் நன்முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளிலும் இல்லம் தேடிக் கல்வி மையங்கள் தொடங்கப்பட்டுள்ள தன்னார்வலர்களுக்கு தற்பொழுது கற்றல் கற்பித்தலுக்கான மூன்றாவது கையேடு , சுவரொட்டிகள் ( Posters ) , அட்டைகள் தொடக்க நிலை / உயர் தொடக்க நிலை என பிரிவு வாரியாக மாவட்டங்களுக்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. மாவட்டவாரியாக வழங்கப்பட்டுள்ள கையேடு . சுவரொட்டிகள் ( Posters ) , அட்டைகளின் எண்ணிக்கை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.


 தன்னார்வலர்களுக்கு பிரிவு வாரியாக வழங்கப்பட்டுள்ள மூன்றாவது கையேடு . சுவரொட்டிகள் , அட்டைகளின் விவரம் பின் வருமாறு

3rd ITK MODULE & TLM - Download here


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி