போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தகுதித் தேர்வினை எழுதுவதிலிருந்து மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு விலக்களித்து அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 27, 2022

போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தகுதித் தேர்வினை எழுதுவதிலிருந்து மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு விலக்களித்து அரசாணை வெளியீடு.

GO NO : 49 , DATE : 23.05.2022 - Download here....

ஆணை

மேலே படிக்கப்பட்ட அரசாணை ( நிலை ) எண் .133 , மனிதவள மேலாண்மை ( எம் ) துறை , நாள் 01.12.2021 - ல் அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்கள் பெருமளவில் நியமனம் பெற ஏதுவாக , மாநிலத்தின் தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி தகுதித்தாள் கட்டாயமாக்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டன.

 அவ்வரசாணைக்கிணங்க , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் , போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித் தாளினை கட்டாயத்தாளாக இணைத்து , அதற்கேற்ப அறிவிக்கைகளை வெளியிட்டு தெரிவு நடவடிக்கையினை மேற்கொண்டுவருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி