அரசு பள்ளியில் மாணவர்களை சேர்த்தால் பெற்றோருக்கு டேபிள் பேன் இலவசம்: மாணவர் சேர்க்கை அதிகரிக்க ஆசிரியர்களின் நூதன முயற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2022

அரசு பள்ளியில் மாணவர்களை சேர்த்தால் பெற்றோருக்கு டேபிள் பேன் இலவசம்: மாணவர் சேர்க்கை அதிகரிக்க ஆசிரியர்களின் நூதன முயற்சி

அரசு தொடக்க பள்ளி ஒன்றில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வகையில், தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பெற்றோருக்கு டேபிள் பேன் இலவச பள்ளியில் சார்பில் வழங்கப்படும் என ஆசிரியர்களின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புது முயற்சி கிராம மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 13ல் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கை  தீவிரப்படுத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் அத்திமாஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.


இப்பள்ளி, இயற்கை சூழலில் விலாசமான பள்ளி வளாகம், வகுப்பறை கட்டிடங்கள், கல்வி உபகரணங்கள், ஆசிரியர்கள் உட்பட அனைத்து வசதிகளும் இருந்தாலும் அக்கிராமமக்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்புவதில் ஆர்வம் கொண்டவர்களாக உள்ளனர். இந்நிலையில், மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் நோக்கில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் இணைந்து மாணவர்சேர்க்கை அதிகரிக்க முடிவு செய்தனர். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்கள் சேர்ந்தால், மாணவர்களின் பெற்றோருக்கு பள்ளியின் சார்பில் டேபிள் பேன் இலவசமாக வழங்கப்படும் என்றும், தரமான இலவச கல்வி, கல்வி உபகரணங்கள், காலை சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்படும் என்றும் குறிப்பாக தனியார் பள்ளி மாணவர்களுக்கு போட்டி போடும் வகையில் அரசுப் பள்ளியில் தரமான கல்வி கற்றுத்தரப்படும் என்ற உறுதி கூறி மேற்கொண்ட விழிப்புணர்வு பிரசாரம் கிராம மக்களை வெகுவாக கவர்ந்தது.

இதன் காரணமாக, முதல் நாள் 4 பேர் பள்ளியில் சேர்ந்தனர். அவர்களுக்கு பள்ளியின் சார்பில் ஊராட்சிமன்ற தலைவர் ஜான்சிபிரகாஷ் டேபிள் பேன் வழங்கினர். தொடர் பிரசாரங்கள் மேற்கொண்டு மாணவர்களை அதிக அளவில் சேர்க்க உள்ளதாக தலைமை ஆசிரியர் பூபதி தெரிவித்தார்.

5 comments:

 1. 2017ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதலில் பணிநியமனம் செய்ய அனைத்து வேலைகளும் நடைபெற்று கொண்டு இருக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்லுறீங்க, எதுவும் நடக்காது

   Delete
 2. ஒருவனை ஏமாற்றே வேண்டுமானால் முதலில் அவனிடம் ஆசையை தூண்ட வேண்டும்.

  ReplyDelete
 3. அரசுப்பள்ளிகளும் தனியார்ப் பள்ளிகள் போன்று பிஸினஸ் கேதாவில் குதிப்பது வேதனையாக இருக்கிறது..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி