ஓய்வு பெற உள்ள அனைத்து வகை ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

May 20, 2022

ஓய்வு பெற உள்ள அனைத்து வகை ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

02.06.2022 முதல் 31.05.2023 வரை ஓய்வு பெற உள்ள அனைத்து வகை ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

2022-2023 - ஆம் ஆண்டிற்கான , அனைத்துவகை ஆசிரியர் பணியிடங்களுக்கான. உத்தேச காலிப்பணியிட மதிப்பீடு தயார் செய்ய ஏதுவாக , 3105.2022 - ல் உள்ளவாறான காலிப்பணியிடங்கள் மற்றும் 2022-2023 - ஆம் கல்வியாண்டில் 02.06.2022 முதல் 31.05.2023 முடிய ஓய்வு பெறவுள்ளஅனைத்துவகை ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தினை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவம் 1 ல் ( EXCEL Format ) தயார் செய்து இணை இயக்குநரின் ( பணியாளர் தொகுதி ) மின்னஞ்சல் ( jdpcc2018@gmail.com ) முகவரிக்கு 18.05,2022 க்குள் அனுப்பிவைக்கும்படியும் , அதன் அச்சு பகர்ப்பு நகலில் முதன்மைக் கல்வி அலுவலர் கையொப்பத்துடன் இவ்வாணையரகத்திற்கு 20.05.2022 - க்குள் கிடைக்கும் வகையில் அனுப்பிவைக்கும்படி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் , இணை இயக்குநர் ( மேல்நிலைக் கல்வி ) கட்டுப்பாட்டின் கீழ்வரும் பதவிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஓய்வுபெறும் எண்ணிக்கை விவரத்தினை படிவம் -2 ல் பூர்த்தி செய்து நேரடியாக இணை இயக்குநர் ( மேல்நிலைக் கல்வி ) மின்னஞ்சல் ( dsew3sec @ gmailcom ) முகவரிக்கு அனுப்பிவைக்கும்படியும் , அவ்வாறே அச்சு பகர்ப்பு நகலில் முதன்மைக் கல்வி அலுவலர் கையொப்பத்துடன் 20.05.2022 - க்குள் அனைத்து அனுப்பிவைக்கும்படியும் முதன்மைக் அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி