சூரியனுக்கே Time table போட்டு Leave விட்ட உதயசூரியன்!கண்கள் வியர்க்க Congrats சொல்லும் ஆசிரியர்கள்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 4, 2022

சூரியனுக்கே Time table போட்டு Leave விட்ட உதயசூரியன்!கண்கள் வியர்க்க Congrats சொல்லும் ஆசிரியர்கள்!!

 ✍🏼 செல்வ.ரஞ்சித் குமார்

பெருந்தொற்று ஊரடங்கால் நவம்பர் 2021-ல் தொடங்கப்பட்ட பள்ளிகள் வாரத்தின் 6 நாள்களும் வேலை நாளாகக் கொண்டு செயல்பட்டதோடு, (கோடைத் தாக்கத்தின் காரணமாக உளவியல் & மருத்துவக் காரணங்களுக்காக குழந்தைதள் நலன் கருதி கோடை விடுமுறை விடப்படும்) மே மாதத்திலும் செயல்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி 122 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் கொளுத்தும் இந்த மே மாதத்திலும் பள்ளிகள் நடைபெற்று வருகின்றன. 10 - 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் நடைபெற உள்ளன.


கோடை வெயிலின் தாக்கம் அதீத அளவில் இருப்பதால், பள்ளிக் குழந்தைகளின் நலன் கருதி 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை கல்வி உரிமைச் சட்டப்படி கட்டாயத் தேர்ச்சிதான் என்பதால் அவர்களுக்கு மட்டுமாவது முன்கூட்டியே விடுமுறை அளிக்க வேண்டும் என்று கல்வியாளர்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர்.


இது தொடர்பாக கடந்த இரு தினங்களாக 'முன்கூட்டியே விடுமுறை' விட பரிசீலித்து வருவதாகப் பதிலளித்து வந்த மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் இன்றைய அறிவிப்பை செய்தி ஊடகங்களின் வாயிலாக அறிந்த அனைத்து ஆசிரியர்களின் கண்களும் வியர்த்து சூரியனுக்கே Time fix பண்ணி Leave-விட்ட விடியல் உதயசூரியன் அரசின் சாமர்த்தியத்தை வியந்து வாழ்த்தி வருகின்றனர்.


அப்புடி என்ன ப.க.து அமைச்சர் சொன்னாருன்னா. . . . 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வெழுத மட்டும் பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது. தேர்வு இல்லாத நாள்களில் பள்ளிக்கு வருகை தரத்தேவையில்லை. வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


இதுல ஆசிரியர்கள் கண்கள் வியர்க்க அப்புடி என்ன இருக்கூனு கேட்குறீகளா. . .


அரசின் பழைய அறிவிப்பின்படி, நாளை முதல் அதாவது 5.5.2022 - 13.5.2022 வரை SMC தேர்தல் சனி நீங்கலாக இன்னும் 7 நாள்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும். 


இதில் மொத்தமுள் 7 நாள்களில் இடையே 2 நாள்கள் தேர்வுகள் இல்லை. மேலும், தற்போதைய அறிவிப்பின்படி 5 பாடங்களுக்கான தேர்வுகளை எழுத 5 நாள்கள் மாணவர்கள் பள்ளிக்கு வந்தாக வேண்டும்.


அதில் 4 தேர்வுகள் 10,11,12 & 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அதாவது முன்னறே அறிவிக்கப்பட்டபடி, கடைசித் தேர்வு நாளான 13.5.2022 வரை. . . . குறிப்பாக அடுத்த வாரம் முழுமையும் மாணவர்கள் பள்ளிக்கு வருவர்.


மொத்தத்துல அந்த முன்கூட்டிய விடுமுறைங்கிறது இடையில ஏதோ ரெண்டு நாளைக்கி லோக்கல் ஹாலிடே விடுற கதை தான்.(புள்ளீங்ளே தேவைனா, லீவு எடுத்தாலும் எடுத்துக்குங்கங்கிறது தனிக்கத.)


ஸ்கூல் பசங்களுக்கான இந்த ரெண்டு நாள் லீவுக்கு எதுக்குயா இம்புட்டு பில்டப்பு என்பதும். . . இதை ஏதோ இமாலய சாதனை அறிவிப்பு போல செய்தி ஊடகங்கள் Breaking News போடுவதும் தான் ஆசிரியர்களின் கண்கள் வியர்க்கக் காரணம். முடியல. . . . . கொஞ்சம் இருங்க. . . ஏங்கண்ண தொடச்சுக்குறேன்.


சேரி. . . அந்த சூரியனுக்கு லீவு விட்ட மேட்டருக்கு. . . Sorry sorry. Time fix பண்ணி லீவு விட்ட மேட்டருக்கு வருவோம்.


தேர்வின் போது மட்டும் மாணவர்கள் பள்ளிக்கு வந்தால் போதுமென்றால். . . . காலை தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்குச் செல்லும் 1, 3, 5, 7 & 9-ஆம் வகுப்பு மாணவர்களையோ. . . பிற்பகல் தேர்வெழுத சுமார் நண்பகல் 12 மணியளவில் தங்களது வீடுகளிலிருந்து கிளம்பி வரும் 2, 4, 6 & 8-ஆம் வகுப்பு மாணவர்களையோ. . . சூட்டெறிக்கும் நண்பகல் வெயில் தாக்காதா?????


அல்லது


அந்த ஒரு மணி நேரத்திற்கு சூரியனே தனக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளும்படி விடியல் அரசின் சார்பாக சூரியனுக்கும் அரசாணை  பிறப்பிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதா?????


நான் பள்ளி பயின்ற காலம் தொட்டே உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 6 - 9 வகுப்புகளுக்கு முழுஆண்டுத்தேர்வின் போது தேர்வெழுத மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வருவர். நீங்களும் அப்படித்தான் போயி தேர்வு எழுதீருப்பீக. ஆனால் அது சற்றே வெயில் கூடிய மார்ச் - ஏப்ரல் மாதங்கள். ஆனால். . . இது அதீத வெயில் வாட்டியெடுக்கும் மே மாதம்.


மொத்தத்தில் இந்த அறிவிப்பை நம்ம முதல்வர் ஸ்டைல்லயே சொல்லனும்னா. . . 

'ஆக. . . அமைச்சர் அறிவிப்பால் யாருக்கும் எந்தப் பயனுமில்ல!'


அப்பறம். . . . "ஆசிரியர்கள் ஒரு லீவுக்கு இம்புட்டு நோகு நோகனுமா? பசங்களுக்கு Exam தான் முக்கியம்"னு சிறுபிள்ளைத் தனமாக சிந்தையைச் சிதறவிட்டுவிடாதீர்கள். சமகாலக் கல்விச் சூழலும் குழந்தை உளவியலும் அறிந்தே குழந்தைகளுக்காக ஆசிரியர்கள் குரல் கொடுக்கின்றனர்.


முதல்வன் முதல்வர் ரகுவரன் ஸ்டைல்ல தான் சொல்லனும். . . .


முடிஞ்சா. . . இந்த ஏழு நாள்ல ஒரு நாள். . . ஒரு நாள். . . க்ளாஸ்ரூம்ல பசங்களோட பசங்களா வந்து இருந்து பாருங்க.'


செய்தி ஊடகவியலாளர்களே!

100% கவனத்திலேயே எடுத்துக்கொள்ளப்படாத 'குழந்தை நலனை'. . . ., கவனத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் உடனான ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் அறிவித்திருப்பது என்பது சூரியனை பாஸ்பரஸ் போர்வையால் மறைக்கும் செயலைப் போன்றதுதான் என களத்தில் செய்தி சேகரிக்கச் செல்லும் உங்களுக்குத் தெரியவில்லையா?


தாங்களும்  எதிர்பார்த்திருந்த ஒரு அரசாகத்தான் இதை வரவேற்றிருப்பீர்கள். தாங்கள் கேட்கும் கேள்விகளையும், கிடைக்கும் பதில் மீதான எதிர்க்கேள்விகளையும் அது சார்ந்த முன்னறிவோடே தர்க்கரீதியாக முன்வைங்க சாமிகளா!


ச்சும்மா ச்சும்மா மைக்க நீட்டி மீண்டுமொரு செங்கோட்டையரை உருவாக்கிவிடாதீர்கள் ப்ளீஸ்!


We ரொம்ப ரொம்ப பாவம். . . .!!

12 comments:

  1. மறுபடியும் செங்கோட்டையா? தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் விரைவில் என்ற வார்த்தையை கேட்டாலே அலறுகிறார்கள். பகுதி நேர ஆசிரியர்கள் இப்போது படிப்படியாக என்ற வார்த்தையை கேட்டாலே அலறுகிறார்கள். மீண்டும் பத்தாண்டு முன்பு உள்ள நிலை... மாறட்டும்... விடியல் பிறக்கட்டும்...

    ReplyDelete
  2. இவர்கள் அதிக புத்திசாலிகள். இவர்கள் கண்ணை முடி கொண்டு சூரியனை வராமல் செய்து விட்டேன் என விளம்பரம் செய்வார்கள்

    ReplyDelete
  3. செவ்வாய் கிரகத்தில் குடியேறத் தகுதியானவர்கள்

    ReplyDelete
  4. முட்டாள் மக்கள் இருக்கும் வரை இப்படிப்பட்ட ஏமாற்று அறிவிப்புகள் தொடரும்.

    ReplyDelete
  5. மாணவர்கள் நலனை ஆசிரியர்கள் நலனை யோசிக்காத அமைச்சர் இவர் தான் ,முதல்வர் ஐயா நீங்களா இதை பரிந்துரைக்கிறீர்கள்.... பள்ளி கல்வி துறையில் அனுபவசாலியான தங்கம் தென்னரசு அவர்களையே திரும்ப கல்வி அமைச்சராக நியமியுங்கள் அது தான் நல்லது ஆக அனுபசாலிகள் தான் நல்லது நல்லது...

    ReplyDelete
  6. உங்களுக்கு லீவு வேணும்..
    அதை விட்டுட்டு இம்புட்டு உருட்டு எதுக்கு...

    ReplyDelete
    Replies
    1. மனமொத்த மாறுதல் விண்ணப்பம் இருமுறை அளித்தும் இதுவரை நடவடிக்கைகள் இல்லை. ஐந்து மாதங்கள் மாறுதல் நடத்தும் கல்வித்துறை வாழ்க.

      Delete
    2. மனமொத்த மாறுதல் விண்ணபித்தவர்கள் குழு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது உங்களுடைய whasts app number ஐ comment செய்யவும்

      Delete
  7. முட்டாள்தனமான மக்களுக்கு புத்திசாலித்தனமான அறிவிப்பு
    பாவம்யா இந்த ஆசிரியர்கள்..

    ReplyDelete
  8. பள்ளிக்கல்வி துறையில் பணிபுரியும் அனைவருக்கும்TET தேர்வு நடத்தவேண்டும்.

    ReplyDelete
  9. சாதாரண BA exam க்கு 40 மார்க் எடுக்க ஜட்டிக்குள் பிட் வைத்து செல்லும் ஆசிரிய இனமே பொங்கி எழு...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி