தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு TNPSC தேர்வில் முன்னுரிமை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2022

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு TNPSC தேர்வில் முன்னுரிமை

 

''தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி.,தேர்வில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக,'' தேர்வாணைய உறுப்பினர் ஆரோக்கியராஜ் கூறினார்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அவர் கூறியதாவது: இன்று டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 க்கான தேர்வு நடக்கிறது.


5,529 பணியிடத்திற்கு தமிழகம் முழுவதும் 11,78 ,175 பேர் தேர்வு எழுதுகின்றனர். 3 ஆண்டுகளாக தேர்வு நடக்காத நிலையில் தற்போது தேர்வாணையத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு கணினி மயமாக்கப்பட்டதால் இத்தேர்வில் நம்பிக்கை வந்துள்ளது. தேர்வு மையத்திற்கு தாமதமாக வருவதை தவிர்த்து காலை 8:59 மணிக்கு தேர்வு அறைக்குள் வர வேண்டும். தமிழகத்தில் பெண்களே அதிகமாக தேர்வு எழுதுகின்றனர் . வட மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை இல்லை.


தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆள் மாறாட்டம் போன்ற செயல்கள் நடக்காமல் இருக்க தொழில்நுட்ப வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு பிப்ரவரியில் முடிவு வெளியாகும், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி