தமிழகத்தில் 1.20 லட்சம் ஆசிரியர்கள் நிலை கேள்விக்குறி:ஆசிரியர் சங்கங்கள் கண்டனம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2022

தமிழகத்தில் 1.20 லட்சம் ஆசிரியர்கள் நிலை கேள்விக்குறி:ஆசிரியர் சங்கங்கள் கண்டனம்

 ''ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 1.20 லட்சம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் வேலைக்காக காத்திருக்கையில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் அரசின் உத்தரவு பாதிப்பை தரும்'' என, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் அ.சங்கர் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, கடந்த 5 ஆண்டுகளாக உயர், மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் 5000 இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். இதனால் அரசுக்கு நிதிச் சுமை இல்லை. ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் 1.20 லட்சம் பேர் தேர்ச்சி பெற்று வேலைக்காக காத்திருக்கின்றனர். 

இதற்கிடையில் தற்காலிக ஆசிரியர்கள் 13 ஆயிரத்து331 பேரை நியமிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது.முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது, 'ஆட்சிக்கு வந்தால் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோரை நியமிப்போம்' என்றார். ஆனால் அதை செயல் படுத்தவில்லை.எனவே ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர் நியமனத்தை அரசு ரத்து செய்ய வேண்டும்.

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது: தமிழக அரசின் மதிப்பூதிய அடிப்படையில் ஆசிரியர் நியமனம் புதிய கல்வி கொள்கையை வரவேற்பது போல் உள்ளது.2013ம் ஆண்டுக்குப் பின் இடைநிலை ஆசிரியர் நியமனம் நடக்கவில்லை. இந்நிலையில் ஆசிரியர் களை மதிப்பூதியத்தில் நியமிக்கும் உத்தரவை கண்டிக்கிறோம். தமிழக அரசு தகுதி வாய்ந்த நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், என்றார்.

5 comments:

  1. இதுதான் உங்கள் திராவிட மாடல் ஆட்சியா டேய் பாவிங்களா எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது என்ன சொன்னீங்க? 177- வது தேர்தல் வாக்குறுதியில் என்ன சொன்னீங்க ஆட்சிக்கு வந்ததும் எல்லாம் மறந்துட்டிங்களா?

    ReplyDelete
  2. Dmk திருட்டு பசங்க

    ReplyDelete
  3. நமது கர்மம்

    ReplyDelete
  4. Dei arasiyal vaathi kaminetingala ungalukku ellaam arivu irukàa illaiyaa,naanga tet pass pannittu thaguthiyoda irukirom engala niyamikkaatha engalukku recommend pannaatha thaguthiye illaatha Unga relative ,friends ku recommend panni intha velaiya pottu student vaazhkaiya yendaa naasa paduthiringa ithula neenga yendaa thalaiyidurinka. thayavu seithu intha thatkaaliga asiriyar paniyin normsla compulsory tet pass pannanum or itk vula irukanumnu or minimum 3 years experience irukanum nu GO konduvarumaaru arasukku kalvithurai eduthu sollumaaru kettu kolgiren ippadikku TET pass pannittu failaraana vaazhkkai vaazhum asiriyar

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி