பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jun 19, 2022

பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது

 

கடந்த மாதம் நடந்த பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. கடந்த மாதம் 5ம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்கியது. அதேபோல 10ம் வகுப்பு தேர்வுகள் 6ம் தேதி முதல் 30ம் தேதி  வரை நடந்தது. இந்த தேர்வை தமிழகம், புதுச்சேரியில் இருந்து சுமார் 17 லட்சம் பேர் எழுதினர். இதையடுத்து ஜூன் 1ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி விரைவில் முடிக்கப்பட்டன.

ஏற்கெனவே பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ஜூன் 17ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளை ஒரே நேரத்தில் வெளியிட தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து தேர்வுத்துறை ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பில், ‘மே மாதம் நடந்த பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 20ம் தேதி (நாளை) சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு கூட்ட அரங்கில் வெளியிட உள்ளார்.

இதன்படி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதியம் 12  மணிக்கும் வெளியிடப்படுகிறது.

மாணவர்கள் தங்கள் முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in  ஆகிய இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.  இந்த இணைய தளத்தில் மாணவர்கள் தங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் மாணவர்களின் செல்போன் எண்களுக்கும், தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்’ எனக்கூறப்பட்டிருந்தது.

1 comment:

  1. MIRTHIKA COACHING CENTRE.. TV MALAI..CHENGAM.. UG TRB ENGLISH study materials are available..10 books for 10 units..2000 pages... materials will be sent by courier..contact 7010520979.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி