ஆசிரியர்கள் நிர்வாக இடமாறுதல் ரத்து - பள்ளிக்கல்வி கமிஷனர் அதிரடி - kalviseithi

Jun 2, 2022

ஆசிரியர்கள் நிர்வாக இடமாறுதல் ரத்து - பள்ளிக்கல்வி கமிஷனர் அதிரடி

 

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நிர்வாக இடமாறுதல் வழங்கும் முடிவை, பள்ளிக் கல்வி கமிஷனர் ரத்து செய்துள்ளார். இதனால், அரசியல்வாதிகள் வழியே வரும் கடிதங்கள், குப்பைக்குப் போகும் என தெரிகிறது.

தமிழக அரசு பள்ளிகளில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் விருப்ப இடமாறுதல் 'கவுன்சிலிங்' நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் 'ஆன்லைன்' முறையில், கடந்த ஆறு மாதங்களாக நடத்தப்பட்டது. தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும், மலை சுழற்சி பணியிடங்கள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் நடத்த வேண்டியுள்ளது. 

இதுகுறித்து, நீதிமன்ற வழக்கு முடிந்ததும் கவுன்சிலிங் நடத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கவுன்சிலிங் முடிந்த பின் காலியாக உள்ள இடங்கள், நேற்று முன்தினம் ஆசிரியர்கள் ஓய்வு பெற்ற இடங்கள் ஆகியவற்றில், நிர்வாக இடமாறுதல் வழங்குமாறு, ஏராளமான ஆசிரியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். 

இவர்களில் பெரும்பாலானோர், தி.மு.க., மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள் வழியே பள்ளிக்கல்வி அமைச்சகத்துக்கு மனு அளித்து உள்ளனர். இதுதவிர பல்வேறு சங்க நிர்வாகிகளும் இடம் மாற விண்ணப்பங்கள் அளித்துள்ளனர்.ஆனால், கவுன்சிலிங் இல்லாமல் நிர்வாக இடமாறுதல் வழங்கக் கூடாது என, முதல்வர் அலுவலகத்தில் இருந்து, பள்ளிக்கல்வி துறைக்கு கண்டிப்பான உத்தரவு வந்துள்ளது.முதல்வரின் முதன்மைச் செயலர் உதயசந்திரனின் பொறுப்பில், பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன.

எனவே, 'என் கண்காணிப்பில் உள்ள துறையில் தேவையற்ற விதிமீறல் புகார்கள் வந்து விடக்கூடாது' என, பள்ளிக்கல்வி கமிஷனருக்கு அவர், அறிவுறுத்தி உள்ளதாக தெரிகிறது.இதன் காரணமாக, பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார், நிர்வாக இடமாறுதல் வழங்கும் முடிவை அதிரடியாக ரத்து செய்துள்ளார்.

கமிஷனரின் அனுமதியின்றி, நிர்வாக இடமாறுதல் என்ற பெயரில், மாநில அளவிலோ, சி.இ.ஓ.,க்களின் வழியே மாவட்ட அளவிலோ இடமாறுதல் அளிக்கக் கூடாது என, பள்ளிக் கல்வி பணியாளர் பிரிவு இணை இயக்குனர், மேல்நிலை கல்வி இணைய இயக்குனர் ஆகியோருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.இதனால், அரசியல்வாதிகள் அளித்துள்ள சிபாரிசு கடிதங்கள் குப்பை கூடைக்கு செல்லும் என தெரிகிறது.

12 comments:

 1. பள்ளி திறப்பதற்குள் தொடக்கக்கல்வி மாவட்ட மாறுதல் நடைபெறுதல் வேண்டும்.அதுவே சரியான நடைமுறை.

  ReplyDelete
 2. இன்று நடைபெறும் சங்க பொறுப்பாளர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட மாறுதலுக்கான தேதியை முடிவு செய்து அறிவிப்பு கொடுங்கள்.

  ReplyDelete
 3. மலை சுழற்சி வழக்கு , தீர்ப்பு மட்டுமே வர வேண்டும்.ஆனால் அது அரசுதான் அரசானை மாற்றி அமைக்க வேண்டும் என்று வழக்கு விவரத்தில் கூறப்பட்டுள்ளது.எனவே அரசு நினைத்தால் மாவட்ட மாறுதலை உடனே நடத்தி முடிக்கலாம்.சங்க பொறுப்பாளர்கள் நினைத்தால் அதனை சாதித்து காட்டலாம்.சங்கங்களை உயிரோட்டமாக வைத்திருங்கள். மாவட்ட மாறுதல் நடைபெறாததால் மன உளைச்சலில் உள்ள ஆசிரியர் உள்ளங்களுக்கு உயிர் கொடுங்கள்.

  ReplyDelete
 4. வரவேற்கத்தக்கது. இதனால் லஞ்சம் ஒழிய வாய்ப்புள்ளது

  ReplyDelete
 5. தொடக்கக்கல்வித்துறையில் ஒருவர் பிற மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியராக நேரடி நியமனம் பெற்று பணிபுரிந்து வந்தால் தன் சொந்த மாவட்டத்திற்கு செல்வதற்கான தற்போது நடைமுறையில் இருக்கும் பொது மாறுதல் கலந்தாய்வில் எந்த ஒரு வழிவகையும் செய்யவில்லை.

  EXAMPLE.

  XY மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் பட்டதாரி ஆசிரியராக 15 ஆண்டுகளாக பிற மாவட்டத்தில் நேரடி நியமனம் பெற்று பணி செய்து கொண்டு இருக்கிறார். அவர் தன் சொந்த மாவட்டத்துக்கு செல்வதற்காக ஒவ்வொரு வருடமும் பொது கலந்தாய்வில் கலந்து கொள்கிறார். ஒவ்வொரு வருடமும் காலி பணியிடம் இல்லை என்று கூறுகின்றனர். இந்த வருடம் வெளிப்படைத்தன்மையுடன் 10 காலிப் பணியிடங்கள் உள்ளன என்பதை தெரிவிக்கின்றனர். அந்த 10 காலி பணி இடங்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வுக்கு முன்னதாகவே அதே ஒன்றியத்தில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலம் நிரப்பப்படுகிறது. அதனால் இந்த வருடமும் காலிப்பணியிடம் இல்லை என்பதை பொது மாறுதல் கலந்தாய்வில் தெரிவிக்கின்றனர். இதே சூழ்நிலை தொடர்ந்து சென்றால் அவர்கள் தன் சொந்த மாவட்டத்துக்கு செல்வதற்கான சாத்தியமே இல்லை.

  எனவே பள்ளிக்கல்வித்துறையை போல தொடக்கக்கல்வித்துறையில் state-level சீனியாரிட்டி கொண்டு வர வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  இதற்கு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்


  ReplyDelete
 6. நிர்வாக மாறுதல் நடத்தபடுகிறதான காரியத்திற்காக கர்த்தரை நோக்கி மன்றாடுவோம்.. பணம் கொடுத்து டிரான்ஸ்பர் வாங்கும்படியாக கர்த்தரின் பிள்ளைகள் ஜெபிப்போம்.. சாத்தானை ஒழிப்போம். அல்லேலூயா. ஸ்தோத்திரம் பாடுவோம்.

  ReplyDelete
  Replies
  1. கர்த்தர் சாமணத்த நக்கி பாக்கலனா உங்களுக்கு எல்லாம் தூக்கம் வராது போல ...

   Delete
 7. குமார் உங்களையும் கர்த்தர் கரங்களால் தொடுவார்.. சகல சாத்தான்களையும் ஒழிப்பார்.. கைகளை உயர்த்தி இடைவிடாது ஸ்தோத்திரம் சொல்லுங்கள் குமார்.

  ReplyDelete
 8. இலஞ்சம் கொடுக்க கூடாதுன்னு நேர்மையா இருந்ததற்கு என்ன கிடைத்தது? சொந்தங்களை விட்டுட்டு, சொந்த மாவட்டத்த விட்டுட்டு, வந்து 8 வருஷம் 10 வருஷமா அனாதை போல கிடக்குற கொடுமைதான் நடக்குது. இவ்வளவு மன உளைச்சலுக்கு ஆசிரியர்களை ஆளாக்கினால், எப்படி மனநிறைவோட பாடங்களை மாணவர்களுக்கு கற்றுத்தர முடியும்? ஆசிரியர்களையும்,அவர்கள் மனநலனையும் கருத்தில் கொள்ளாமல் ஒவ்வொரு அதிகாரிகளும் அவங்க இஷ்டத்துக்கு ஒரு ஆணையை பிறப்பிப்பது ஏன்?

  ReplyDelete
 9. சகோதரர் பை பை அவர்களே. செங்கடலை பிளந்து அதிசயம் செய்த கர்த்தர் உங்களுக்கும் அதிசயம் செய்வார்.. சாத்தானை ஜெயிக்க ஸ்தோத்திரம் பண்ணுங்கள். அல்லேலுயா கர்த்தரையே பாடுங்கள்.

  ReplyDelete
 10. எல்லா லூசு கூமுட்டைகளையும் மன்னியும்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி