அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கு அதிகாலை முதல் வரிசையில் நின்ற பெற்றோர்கள்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jun 5, 2022

அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கு அதிகாலை முதல் வரிசையில் நின்ற பெற்றோர்கள்!

 

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் பல மணி நேரம் காத்திருந்து தங்களுடைய பிள்ளைகளுக்கு எல்.கே.ஜி. வகுப்பிற்கான சேர்க்கை விண்ணப்ப படிவங்களை பெற இரவு பகலாக காத்திருந்த நிலை தற்போது மாறி அரசுப் பள்ளிகளிலும் இப்படி காத்திருந்து விண்ணப்பங்களை பெறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதற்கு சான்றாக திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்களுடைய பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க அதற்கான விண்ணப்பப் படிவங்களை பெறுவதற்காக பெற்றோர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அரசுப் பள்ளியின் தரம் எந்த அளவிற்கு உயர்ந்து உள்ளது என்பதை அடையாளப்படுத்தும் விதமாக மாறியுள்ளது என்கின்றனர் அப்பகுதி மக்கள். மேலும், இதுகுறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகையில் பள்ளியில் நல்ல ஒழுக்கங்களும், நல்ல கல்வியும், பயிற்சியும் மாணவர்களின் வளர்ச்சியில் அதிக அளவு கண்டிப்பும் கண்காணிப்பும் இருப்பதால் இந்த அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று தாங்கள் ஆர்வம் காட்டுவதாக கூறுகின்றனர்

5 comments:

 1. அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. போற்றுதலுக்குரியது

  ReplyDelete
 3. இது அரசுப் பள்ளி என உங்களுக்கு தெரியுமா ? இது யார் நடத்தும் பள்ளி என ஶ்ரீரங்கம் சென்று விசாரிக்கவும்.....
  இதில் ஆசிரியர்கள் எவ்வாறு வேலைக்கு வந்தனர் என கேட்டு பதிவிடவும்.....

  ReplyDelete
 4. அது அரசுப்பபள்ளியே அல்ல.பென்கள் மேல்நிலைப்பள்ளியே. .அரசினர் பென்கள் மேல்நிலைப்பள்ளி அல்ல.

  ReplyDelete
  Replies
  1. பெண்கள் மேல்நிலைப்பள்ளி

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி