அரசு பள்ளிகளில் விரைவில் ஆசிரியர்கள் நியமனம் : அமைச்சர் மகேஷ் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 23, 2022

அரசு பள்ளிகளில் விரைவில் ஆசிரியர்கள் நியமனம் : அமைச்சர் மகேஷ் பேட்டி

 

''அரசு பள்ளிகளில் அதிகரித்துள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப விரைவில் ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்," என, மதுரையில் கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.


அவர் கூறியதாவது: 

கல்வித்துறை தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்ல பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஆரம்ப கல்வியை வலுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளால் 2025ல் இத்துறை சிறப்பான இடத்தில் இருக்கும். தொடக்க கல்விக்கு என தனி நிர்வாகம் ஏற்படுத்தும் திட்டம் தற்போது இல்லை.அரசு பள்ளிகளில் அதிகரித்துள்ள மாணவர் சேர்க்கைக்கு ஏற்பவும், இந்தாண்டு ஓய்வு பெறும் ஆசிரியர் காலியிடங்களை சேர்த்தும் விரைவில் ஆசிரியர்கள் நிரப்பப்படுவர். 

பொதுத் தேர்வு தோல்வியால் மாணவர்கள் தற்கொலை செய்தது வருத்தமளிக்கிறது. தேசிய கல்விக் கொள்கை வேண்டாம் என்று தான் மாநில கல்விக் கொள்கை பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. மாணவர்களுக்கு எது சரியாக இருக்கும் என்பதை முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வார். அரசு பள்ளிகளில் இடியும் நிலையில் இருந்த 10,031 வகுப்பறைகள் இடிக்கப்பட்டுள்ளன. அடுத்த கல்வியாண்டிற்குள் அனைத்தும் இடிக்கப்படும். 

நிதி ஒதுக்கிய பின் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் ஆகியவை தமிழகத்தின் சாதனை திட்டங்கள். 'ரீடிங் மாரத்தான்' போட்டியில் 18.36 லட்சம் குழந்தைகள் பல கோடி வார்த்தைகளை வாசித்துள்ளனர். தன்னார்வலர்கள் வாசித்தனர் என்பது தவறு. மாணவர்களுக்கு நோட்டுகள் விரைவில் வழங்கப்படும் என்றார். 

கல்வி கமிஷனர் நந்தகுமார், கலெக்டர் அனீஷ்சேகர் உடனிருந்தனர்.

17 comments:

  1. விரைவில் என்பதற்கு அர்த்தம் என்ன சார்? ஒரு இரண்டு வருடங்கள் இருக்குமா?

    ReplyDelete
    Replies
    1. பொய் (யா) மொழி

      Delete
    2. செங்கோட்டை பரவாயில்லை. தகுதித் தேர்வு எழுதி 9 ஆண்டு காலம் முடிந்து இன்னும் விடியல் இல்லை. இப்போது மீண்டும் தற்காலிக ஆசிரியர் நியமனம்... பின்னர் எதற்காக தகுதித் தேர்வு? கல்வித்துறை மீண்டும் அதே அதிமுக ஆட்சியில் இருந்த நிலையில் இருந்து மாறவில்லை.

      Delete
  2. அண்ணைக்கு காலையில 6மணி கோழி கொகோரோக்கோனு கூவுச்சு.....................?

    ReplyDelete
  3. பொய் (யா) மொழி

    ReplyDelete
  4. பொய்-யா மொழி

    ReplyDelete
  5. Aided schools give approval for posting we r waiting for 4 years

    ReplyDelete
  6. அதே டைலர் அதே துணி

    ReplyDelete
    Replies
    1. But sizeeeeeeee mattum than vera.. 😄😄😄

      Delete
  7. செங்கோட்டை பரவாயில்லை. தகுதித் தேர்வு எழுதி 9 ஆண்டு காலம் முடிந்து இன்னும் விடியல் இல்லை. இப்போது மீண்டும் தற்காலிக ஆசிரியர் நியமனம்... பின்னர் எதற்காக தகுதித் தேர்வு? கல்வித்துறை மீண்டும் அதே அதிமுக ஆட்சியில் இருந்த நிலையில் இருந்து மாறவில்லை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி