தொடக்க கல்விக்கு மாவட்ட அதிகாரி?பள்ளிக்கல்வி துறை முக்கிய முடிவு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jun 5, 2022

தொடக்க கல்விக்கு மாவட்ட அதிகாரி?பள்ளிக்கல்வி துறை முக்கிய முடிவு

தொடக்க கல்வி பிரிவுக்கு மாவட்டந்தோறும், தனி அலுவலகங்களை மீண்டும் திறக்க, பள்ளிக் கல்வி துறை முடிவு செய்துள்ளது. 

இதற்கான முதற்கட்ட ஆலோசனை கூட்டம் முடிந்துள்ளது.தமிழக பள்ளிக்கல்வி துறை கமிஷனர் நந்தகுமார், ஏற்கனவே டி.ன்.பி.எஸ்.சி.,யில் பல நிர்வாக மாற்றங்களை செய்தவர். அதேபோல, பள்ளிக்கல்வியை கண்காணிக்கும் முதல்வர் அலுவலக முதன்மை செயலர் உதயசந்திரனும், பள்ளிக்கல்வி துறையிலும், டி.என்.பி.எஸ்.சி.,யிலும் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டவர்.

எனவே, உதயசந்திரனின் ஆலோசனைப்படி, தமிழக பள்ளிக் கல்வியின் நிர்வாக முறைகளில் மாற்றம் செய்ய, நந்தகுமார் முயற்சித்து வருகிறார். இதன்படி, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.அதாவது, பள்ளிக் கல்வி இயக்குனரகத்தில் இருந்த பல்வேறு அதிகாரங்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பகிர்ந்து வழங்கப்பட்டன. 

இதற்கான அரசாணை அமலானபின், உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகள் இடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டு, நிர்வாக விஷயங்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், மாவட்டங்களுக்கு அதிகாரங்கள் வழங்கிய, 101, 108 என்ற எண்கள் கொண்ட அரசாணையை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுஉள்ளது.

இதற்கான முதற்கட்ட ஆலோசனை, பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமார், தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி ஆகியோர் தலைமையில் நடந்துள்ளது.இதில், தொடக்க கல்வி பிரிவுக்கு, மீண்டும் மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களை தனியாக நியமிக்கலாம் என, யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான கருத்துரு தயார் செய்யவும், அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கருத்துருவை, முதல்வர் அலுவலகத்தில் தாக்கல் செய்தபின், அங்கிருந்து ஒப்புதல் கிடைத்ததும், முறையாக அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

6 comments:

 1. குழந்தைகள் கையெழுத்து அழகாக மாற்றுவது எப்படி

  https://tamilmoozi.blogspot.com/2022/06/blog-post_4.html

  ReplyDelete
 2. தமிழ்மொழி அவர்கள் கர்த்தரின் பிள்ளை.. கர்த்தரை நம்புங்கள் கையெழுத்து அழகாக வரும்.

  ReplyDelete
  Replies
  1. அய்யா மத நம்பிக்கை என்பது அவரவர் விருப்பம் அதில் யாரும் உள் நுழைய வேண்டாம்....மேலும் இது அதற்கான இடமும் அல்ல..... தொடக்க கல்வி மாறுதல் பற்றி செய்தி இருந்தால் பதிவிடவும்

   Delete
  2. கர்த்தர் இல்லாத இடமே இல்லை ஐயா. எல்லா சகல ஸ்தலங்களிலும் கர்த்தரின் கிருபை நிறைந்துள்ளது. ஸ்தோத்திரத்தோடே கர்த்தரை நமஸ்கரியுங்கள். அல்லேலுயா பாடுங்கள்.

   Delete
 3. தொடக்கக் கல்வி மாறுதலை கர்த்தர்தாமே தம் உள்ளங்கைகளில் வைத்து தாங்கும்படியாக ஜெபிக்குறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  ReplyDelete
 4. Dt to Dt transfer viraivil nadathunga please

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி