கைவிட்ட சங்க நிர்வாகிகள் - தொடக்கக்கல்வி மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு - தீர்வு காண வழி என்ன? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2022

கைவிட்ட சங்க நிர்வாகிகள் - தொடக்கக்கல்வி மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு - தீர்வு காண வழி என்ன?


🖋️🖋️🖊️✒️ஆசிரிய நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

2021-22ஆம் கல்வியாண்டுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் தொடக்கக்கல்வி துறையில் உள்ள இடைநிலை ஆசிரியர்களான நம்மைத்தவிர மற்ற அனைவருக்கும் முடிக்கப்பட்டு விட்டது. இதை நடத்துவதற்கு எந்த சங்கமும் வலியுறுத்துவதாகவோ கவலைப்பட்டதாகவோ தெரியவில்லை. நமக்கு வேண்டும் என்றால் நாம் தான் இனி வரும் காலங்களில் களத்தில் இறங்க வேண்டும். சங்கங்கள் தங்கள் வலிமையை இழந்து நிற்பதால் அது அதை புதுப்பிக்க வேண்டிய கட்டமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நிற்கிறது. அது ஒருபுறம் அப்படியே இருக்கட்டும். 

நாம் நமது பிரச்சனையான மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடத்தச் செய்ய 3 விதமான வழிகளை கையாள வேண்டியுள்ளது. இதில் யார் யாருக்கு எதில் விருப்பமோ அதன் படியான தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.

வழி 1 

தொடக்கக்கல்வி துறை இயக்குநரை நேரில் சந்தித்து கலந்தாய்வை இக்கல்வியாண்டின் தொடக்கத்திலேயே நடத்த கோரிக்கை விடுத்தல்.

வழி 2

பள்ளிக்கல்வி துறை அமைச்சரை நேரில் சந்தித்து நம் நிலையை கூறி வலியுறுத்துதல்.

வழி 3

வழக்கு தொடுத்தல். வழக்கு தொடுக்க விருப்பமுள்ளவர்கள் தனியாக தொடர்பு கொள்ளவும். 

நமக்கு தேவையென்றால் நாம் தான் இனி கேட்க வேண்டும். மற்றவர்களை நம்பி இனி பயன் இல்லை. வாருங்கள் யார் யாரெல்லாம்  மாவட்ட மாறுதல் கலந்தாய்வை விரும்புகிறீர்களோ அவர்களெல்லாம் தங்கள் பெயரை பதிவு செய்யவும்.

வழக்கு தொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். உங்களில் யாருக்கேனும் விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும்.

இவண்
முத்துப்பாண்டி - 94867 18060
அமீன் - 9500360730

Whatsapp குழுவில் இணைந்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்...

Join now


நன்றி! 

8 comments:

 1. வழக்கு தொடுப்பது நல்ல முடிவுதான்.ஆனால் அதற்கு தீர்ப்பு வருவதற்குள் அடுத்தாண்டிற்கான கலந்தாய்வு வந்துவிடும்.எனவே முதல் இரண்டு வழிகளில் எது நமக்கு வழி கிடைக்குமோ அதை செய்யலாம்.

  ReplyDelete
  Replies
  1. வரவேற்கத்தக்க கருத்து

   Delete
 2. ஆனால் இதில் ஒரு உண்மை என்னவென்றால் தொடக்கக்கல்வி மாவட்ட மாறுதல் நடைபெறவில்லை என்பது தொடக்கக்கல்வி துறை இயக்குனரும்,பள்ளிக்கல்வி துறை அமைச்சரும் நன்கு அறிந்ததே!

  ReplyDelete
 3. மாவட்ட மாறுதலில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்துதான் முதல்வர் /கல்வி அமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஜுன் 13ம் தேதி தகவல் தெரியும் என கல்வி அமைச்சர் அவர்கள் தெரிவித்து இருந்தார்கள். இதுவரை எந்தவித தகவலும் இல்லை. ஏன் இந்த மாவட்ட மாறுதல் மட்டும் இவர்கள் கருத்தில் கொள்ளாதது ஏன்? காத்திருந்து நாளும் கடந்தது மீண்டும் ஏமாற்றமே கிடைத்தது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள் மட்டுமல்ல. எங்கள் குழந்தைகளும்தான். நாமும் கருத்துக்களை பதிவிட்டுக்கொண்டுதான் உள்ளோம். ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லையே. மனம் மிகுந்த வேதனையில் பதிவிடுகிறேன். அரசிடம் கொண்டு செல்ல என்ன செய்ய வேண்டுமோ நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம். அனைவரும் முதல்வரின் இணைய தளத்தில் இக்கருத்தை பதிவிடலாம். முகவரி தெரிந்தால் பதிவிடவும்.

  ReplyDelete
  Replies
  1. குழு, ஒரு பொது சந்திப்பை ஏற்பாடு செய்யுங்கள். அப்போதுதான் நாம் ஒரு தீர்மானத்தைப் பெற முடியும்

   Delete
 4. ஆம், இந்த பிரச்சனையை நமது மாண்புமிகு முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும்

  ReplyDelete
 5. Good Initiative. Thanks for taking this steps.

  ReplyDelete
 6. 4 வது வழி நைசாக பணம் கொடுத்து மாறுதல் பெறுவது. இறுதியில் இம் முறையே வெற்றி பெறும்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி