விடைத்தாள் திருத்த வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 3, 2022

விடைத்தாள் திருத்த வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

 

விடைத்தாள் திருத்த வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

தமிழகத்தில் இந்தாண்டிற்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நிறைவடைந்துள்ள நிலையில், விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்றுவருகிறது. பல இடங்களில் போதிய ஆசிரியர்கள் வராததால் விடைத்தாள் திருத்தும் பணிகளில் தாமதம் ஏற்படுவதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்களில் பேச்சு அடிபட்ட நிலையில், விடைத்தாள் திருத்த வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.

 

திட்டமிட்ட தேதியில் தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டுமென்பதால் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஒதுக்கப்பட்ட ஆசிரியர்களை விடுவிக்க தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, விடைத்தாள் திருத்தும் மையங்களில் போதிய வசதியில்லை என்று கூறி சில இடங்களில் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி