பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும்; ஆசிரியர் நல கூட்டமைப்பு வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jun 14, 2022

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும்; ஆசிரியர் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்

 

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் திருவள்ளூரில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவராக சுரேஷ், மாவட்ட செயலாளராக ஜீவா, பொருளாளராக கமலக்கண்ணன் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து 4 துணைத்தலைவர்கள், 4 துணை இணை செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள் இருவர், தணிக்கையாளர் ஒருவர், செயற்குழு உறுப்பினர்கள் 4 பேர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

கோட்டத்துக்கான தேர்தலில் பொன்னேரி கோட்ட தலைவர் சந்திரன், திருவள்ளூர் கோட்ட தலைவராக தர், திருத்தணி கோட்ட தலைவராக தெய்வசிகாமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிர்வாகிகளாக தேர்வு செய்த அனைவருக்கும் நிறுவன தலைவர் சா.அருணன் சால்வை அணிவித்து சான்றிதழ்  வழங்கினார்.


‘’அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்தவேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தை வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை சிறப்பு காலமுறை ஊதியத்தில் இருந்து காலமுறை ஊதியமாக மாற்றி அவர்களை மேம்படுத்தவேண்டும்’ என்பது உள்பட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி