ஆசிரியர்களின் பணி சார்ந்த தேவைகள் இணையவழியில் பணிப்பலன்களைப் பெறுவதற்கான புதிய மின்னனு செயலி - பள்ளி கல்வி ஆணையரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 13, 2022

ஆசிரியர்களின் பணி சார்ந்த தேவைகள் இணையவழியில் பணிப்பலன்களைப் பெறுவதற்கான புதிய மின்னனு செயலி - பள்ளி கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

 

பள்ளிக் கல்வி ஆசிரியர்களின் பணி சார்ந்த தேவைகள் இணையவழியில் பணிப்பலன்களைப் பெறுவதற்கான புதிய மின்னனு செயலி உருவாகக்கப்பட்டது பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் - தகவல் தெரிவித்தல் சார்ந்து.


தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் அரசு / அரசு உதவி பெறும் / தொடக்க பள்ளிகள் / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு , மருத்துவ விடுப்பு , ஈட்டிய விடுப்பு கோருதல் , அனுமதி மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு எழுத்துப்பூர்வமாக தங்கள் உயர் அலுவலர்களிடம் நேரடியாக சென்று விண்ணப்பித்து பயனடைந்து வந்தனர் . அதனால் நேரடியாக விண்ணப்பிக்கும் முறையில் ஆசிரியர்களுக்கு சிரமங்களும் கால விரையமும் ஏற்படுகிறது . எனவே இவ்வாரான சிரமங்கள் மற்றும் கால விரையத்தினை தவிர்க்கும் பொருட்டு 25.05.2022 அன்று மாண்புமிகு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அவர்களால் ஆசிரியர்கள் அவர்தம் கைபேசி வாயிலாக தற்செயல் விடுப்பு , மருத்துவ விடுப்பு , ஈட்டிய விடுப்பு கோருதல் , அனுமதி மற்றும் பிற பணி சார்ந்த தேவைகளுக்கு விண்ணப்பிக்கும் செயலி TNSED - Schools ( இணையவழியில் பணிப்பலன்களைப் பெறுவதற்கான செயலி ) ஒன்று உருவாகக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

2022-2023 ஆம் கல்வியாண்டிலிருந்து இந்த செயலி பயன்படுத்துவது குறித்த விளக்கம் இணைப்பில் தரப்பட்டுள்ளது . எனவே ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்கள் அனைவரும் இனிவரும் காலங்களில் இச்செயலி மூலம் தங்கள் பணி சார்ந்த தேவைகள் / விடுப்புகளுக்கு விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 இணைப்பு : செயலி விளக்க குறிப்பு

STAFF LEAVE APPLICATION செயல்பாட்டு வழிமுறைகள்.pdf - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி