இன்று மாலை முதல்-அமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் - DA அறிவிப்பு வெளியாகுமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2022

இன்று மாலை முதல்-அமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் - DA அறிவிப்பு வெளியாகுமா?

 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.


சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5 மணி அளவில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் ,துறை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.


இந்த கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிப்பதுக்கு உண்டான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும்,செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விவாதிக்க உள்ளதாகவும், புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.


மேலும் கொரோனா பரவலை கட்டுபடுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.முக்கிய கொள்கை முடிவுகளுக்கு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படுமென அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.


எனவே,  அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகுமா என எதிர்நோக்கி உள்ளனர்.

4 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி