அரசு பள்ளிகளில் LKG,UKG வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் -அமைச்சர்அன்பில் மகேஷ் அறிக்கை - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jun 9, 2022

அரசு பள்ளிகளில் LKG,UKG வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் -அமைச்சர்அன்பில் மகேஷ் அறிக்கை

LKG , UKG மாணவர் சேர்க்கை சமூக நலத்துறைக்கு மாற்றப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியான நிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று மீண்டும் செயல்படும் என அறிவிப்பு.

தமிழ்நாட்டில் 2,381 அரசு தொடக்க , நடுநிலைப் பள்ளிகளுக்குள் அமைந்த அங்கன்வாடி மையங்கள் பரிசோதனை அடிப்படையில் L.K.G. , U.K.G. , வகுப்புகளாக மாற்றப்பட்டு , சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன . முந்தைய ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருந்த காரணத்தால் , கூடுதல் எண்ணிக்கையில் இருந்த ஆசிரியர்கள் L.K.G. , U.K.G. , வகுப்புகளை எடுக்க அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர் . ஆனால் , அரசுப் பள்ளிகளின் தரத்தினை உயர்த்திட , இந்த அரசு கடந்த ஓராண்டாக எடுத்து வரும் பல்வேறு சிறப்பு முயற்சிகளின் காரணமாக , சுமார் 7 இலட்சம் மாணவர்கள் கடந்த கல்வியாண்டில் மட்டும் மாநிலம் முழுவதுமுள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் பல்வேறு வகுப்புகளில் புதிதாக சேர்ந்துள்ளனர் . இதன் காரணமாக , அரசுப் பள்ளிகளில் கூடுதலாக கடந்த கல்வியாண்டில் 3,000 வகுப்புகள் ( Sections ) தொடங்கப்பட்டன . அதிகமான எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கையினால் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் தேவை அதிகரித்ததையடுத்து , L.K.G. , U.K.G. , வகுப்புகளில் பாடம் எடுக்க அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஆசிரியர்கள் , பணி மாறுதல் வாயிலாக 1 முதல் 5 வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக அண்மையில் சென்றுள்ளனர்.

 இருப்பினும் , சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் தொடர்ந்து அவர்களது கல்வியினை தங்கு தடையின்றி பெற அனைத்து நடவடிக்கைகளும் அரசால் எடுக்கப்பட்டுள்ளன.

 இந்நிலையில் , L.K.G. , U.K.G. , வகுப்புகளை அரசுப் பள்ளிகளில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வரப்பெற்ற கோரிக்கையினை ஏற்று , மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைக்கிணங்க , அரசுப் பள்ளிகளில் L.K.G. , U.K.G./ வகுப்புகள் தொடர்ந்து நடைபெற பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது . இதற்கென தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவையான இடங்களில் நியமிக்கப்படுவர் .
1 comment:

  1. 2013 ல் தேர்ச்சி பெற்ற எங்களுக்கு மட்டும் முதலில் பணிநியமனம் செய்யுங்கள் என்று கேட்டால் 2017 2019 ல் தேர்ச்சி பெற்ற ஒருவர் கூட போராட்டக்கலத்திற்கு வர மாட்டார்கள்... 2013ல் 20000 பணியிடங்களை நிரப்பியும் மனசாட்சி இல்லாமல் திரும்பவும் உங்களுக்கே பணி நியமனம் கேட்டால் அப்போ 17 19ல் தேர்ச்சி பெற்றவர்கள் எப்போது பணி நியமனம் பெறுவது?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி