நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு: தேசிய அளவில் 94.4 % மாணவர்கள் தேர்ச்சி - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 22, 2022

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியீடு: தேசிய அளவில் 94.4 % மாணவர்கள் தேர்ச்சி

 

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இன்று  காலை சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தற்போது 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. சிபிஎஸ்இ தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் http://cbse.result.nic.in/ என்ற இணைய தளம் வாயிலாக தங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது.


12-ம் வகுப்பு பொது தேர்வை போல இந்த தேர்வுகளும் இரண்டு கட்டமாக நடைபெற்றது. அந்த இரண்டு கட்ட தேர்வுகளுக்கும் சேர்த்தே தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி நாடு முழுவதும் தேர்வு எழுதிய 20,93,978 மாணவர்களில் 19,76,668 மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 94.4 % ஆகும்.

நாட்டில் அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.68% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கிய சென்னை மண்டலத்தின் 98.78% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். மேலும் தேசிய அளவில் 93.80% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.95.21% மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி