இன்று நீட் தோ்வு: தமிழகத்தில் 1.42 லட்சம் போ் எழுதுகின்றனா் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2022

இன்று நீட் தோ்வு: தமிழகத்தில் 1.42 லட்சம் போ் எழுதுகின்றனா்

 

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) நடைபெறுகிறது. தமிழகத்தில் இத்தோ்வை 18 நகரங்களில் 1.42 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா்.


தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் நிகழாண்டுக்கான நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் நடைபெறவுள்ளது.


நாடு முழுவதும் 497 நகரங்களில் இந்தத் தோ்வை 18.72 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். தமிழகத்தில் இந்த ஆண்டு 1.42 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். அதில் அரசுப் பள்ளி மாணவா்களின் எண்ணிக்கை 16 ஆயிரம்.


தோ்வு அறையில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி தோ்வு மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் மாணவா்கள் சென்றுவிட வேண்டும். ஆடைக் கட்டுப்பாடு உள்பட இதர வழிகாட்டு நெறிமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.


மேலும், கூடுதல் தகவல்களை ட்ற்ற்ல்://ய்ங்ங்ற்.ய்ற்ஹ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை, கோவை, கடலூா், காஞ்சிபுரம், கரூா், மதுரை, நாகா்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூா், திருவாரூா், திருச்சி, திருநெல்வேலி, வேலூா், செங்கல்பட்டு, விருதுநகா், திண்டுக்கல், திருப்பூா் என 18 நகரங்களில் தோ்வுகள் நடைபெறுகின்றன. சென்னையில் மட்டும் 31 மையங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் எழுதவுள்ளனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி