பொறியியல் கலந்தாய்விற்காக கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2,00,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்களிடையே பெறியியல் படிப்புகளின் மீது மீண்டும் ஆர்வம் ஏற்பட காரணம், கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த சூரப்பாவுக்கும், அரசுக்கும் இடையே இருந்த மோததால் ஏற்பட்ட குழப்பமான சூழல் மற்றும் வேலைவாய்ப்பின்மை காரணமாக பொறியியல் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்ததால் பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தன. 2014ம் ஆண்டு 1,90,000 பேர் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பெருமளவில் குறைந்தன. 2018-2019 கல்வியாண்டில் காலியாக இருந்த 1,78,000 இடங்களுக்கு நடந்த கலந்தாய்வில் வெறும் 71,900 மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர்.
இதற்கு, அடுத்த இரண்டு கல்வியாண்டுகளிலும் இதே போக்கே நீடித்தது. ஆனால், நடப்பாண்டில் இந்தநிலை முற்றிலும் மாறி இதுவரை 2,00,000கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக, ஐ.டி துறையில் சேர மாணவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த சூழலில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தொழில் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டன. முன்னணி கல்வி நிறுவனங்களில் படிப்பது அரசு பள்ளி மாணவர்களுக்கு கனவாக இருந்த நிலையில், அரசின் இட ஒதுக்கீட்டினால் அந்த கனவு நனவாகி இருக்கின்றன. இது கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் எதிரொலித்து இருக்கின்றன.
இதனிடையே, பொறியியல் மீதான ஆர்வம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என தனியார் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாளையுடன் பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் முடிவடைய உள்ள நிலையில் இன்னும் 50,000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதாகவும், விண்ணப்பித்துள்ள மாணவர்கள் விரைந்து கலந்தாய்விற்கான கட்டணத்தை செலுத்தி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும் என பொறியியல் மாணவர் சேர்க்கை குழு அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி