நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 11, 2022

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

 

வரும் 17ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இவற்றில் இளநிலை மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. நடப்பாண்டில் இளநிலை மருத்துவ பட்டபடிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு வரும் 17ம் தேதி நடைபெறுகிறது. மதியம் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 546 நகரங்களில் உள்ள மையங்களில் இந்த தேர்வு நடைபெறவுள்ளது. த


மிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. http://neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக நுழைவு தேர்வு சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கலாச்சாரம், சமயம் சார்ந்து உணர்வோடு அணிந்து வரும் ஆடைகள் தொடர்பான விபரத்தை தேர்வு மையத்தில் இரண்டு மணிநேரம் முன்னதாக தெரிவிக்க வேண்டும்.

இருப்பினும், விண்ணப்பதாரர்கள் கைக்கடிகாரம், புத்தகங்கள், காகிதத் துண்டுகள், பத்திரிகைகள், மின்னணு சாதனங்கள் தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்படாது. தடை செய்யப்பட்ட இந்த பொருட்களை யாராவது வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் விண்ணப்பம் ரத்து செய்யப்படுவதுடன், அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி