1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்க ஏற்பாடு.திட்டத்தை விரைவில் தொடங்கி வைக்க உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்
அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை சத்தான சிற்றுண்டி வழங்குவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தொடங்கிவிட்டது.
காலை 5 : 30-7 : 45 மணிக்குள் சமையல் பணியை முடிக்கவும் , காலை 8 : 15-8 : 45 மணிக்குள் உணவை குழந்தைகளுக்கு வழங்கவும் உத்தரவு.
தமிழகத்தின் முதற்கட்டமாக 15 மாவட்டங்களில் 292 கிராம பஞ்சாயத்துகளில் பரீட்சார்த்த முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமையல் மேற்கொள்ளும் சுய உதவிக் குழுவிற்கு முறையாக பயிற்சிகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு சிற்றுண்டி, பெண்களுக்கு இலவச பேருந்து, உயர்கல்வி படிப்பவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், தனியார் பள்ளியில் படிக்க விரும்பும் குழந்தைகளுக்கு RTE மூலம் ஊக்கத்தொகை இதையெல்லாம் மக்கள் கேட்கவே இல்லை. மக்கள் எதிர்பார்ப்பது படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே அதனால் தற்போது நிலவி வரும் இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுத்தால் மக்கள் சந்தோஷப்படுவார்கள்
ReplyDelete