இல்லம் தேடிக் கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் எண்ணிக்கை குறைப்பு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 23, 2022

இல்லம் தேடிக் கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் எண்ணிக்கை குறைப்பு!

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் வாயிலாக மாதந்தோறும் பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறும். இம்முறை சென்னை மண்டலத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் ( 15.07.2022 ) இல்லம் தேடி கல்விக்கான மாவட்ட மற்றும் வட்டார அளவில் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டு செயல்படவேண்டும் என்றும் , அதே கருத்தினை வலியுறுத்தி சிறப்பு பணி அலுவலர் அவர்களாலும் அறிவுரை வழங்கப்பட்டது.

அதன்படி மாவட்டத்திற்கு ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும் , ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளரும்  நியமிக்கப்பட வேண்டும்.

 தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் இல்லம் தேடி கல்வி மையங்களில் சிறப்பாக செயல்படவும் , ஏனைய மீதமுள்ள ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் மீளவும் பள்ளி பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்படுகிறது.

 அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி செயல்படுமாறும் தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1 comment:

  1. மனமொத்த மாறுதல் விண்ணப்பம் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் போது எங்களுடைய தகவல்களை சமர்பித்தலில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதைப்பற்றிய விபரம் யாருக்காவது தெரிந்தால் இங்கே பதிவிடவும். நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது . எங்களின் நிலை அறிந்து கருணை உள்ளத்தோடு உதவும் கரங்களுக்கு நன்றிகள் பல.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி