ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி படிக்க மாணவ- மாணவியருக்கு அழைப்பு.. விண்ணப்பிப்பது எப்படி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 13, 2022

ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி படிக்க மாணவ- மாணவியருக்கு அழைப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?

 

மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் மற்றும் மாணவிர்களுக்கென செலவினம் இல்லாமல் 26 விடுதிகள் உள்ளன. அதில் தங்கி படிக்க மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


சென்னை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென 26 விடுதிகள் உள்ளன. அவற்றின் விவரம்

பள்ளி விடுதிகளில் 04 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவர்-மாணவியர்களும், கல்லுாரி விடுதியில் பட்ட படிப்பு பயிலும் மாணவர்கள்/மாணவியர்களும் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.

விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் அனைத்து விடுதி மாணவ/ மாணவியர்களுக்கும் உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படும்.


10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சீருடைகளும்,10ம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகளும் வழங்கப்படும்.

விதிமுறைகள்:


ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி கல்வி பயில விரும்பும் மாணக்கர் இணைய வழியில் (online) https://tnadw.hms.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.


இணைய வழியில் (online) பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரால் விடுதி வாரியாக பரிசீலனை செய்யப்பட வேண்டும். . மேற்படி விண்ணப்பங்களில் தகுதியுள்ள மாணாக்கர்களை தெரிவு செய்திடும் பொருட்டு, அரசாணை (நிலை) எண்.195, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நாள்: 02.08.1991-இல் தெரிவிக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலாள ஆலோசனைக் குழுவினை( Advisory committees for selection of student for admission into Government of Adi Dravidar Welfare Hostels} கூட்டி மானாக்கரை தேர்வு செய்யப்பட வேண்டும்.


ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் விடுதியில் தங்கி பயிலும் மாணாக்கர் புதுப்பித்தல் விண்ணப்பத்தினை (Renewal) இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.


இணைய வழியில் விளண்ணப்பிக்க தவறிய மாணாக்கர் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று, அதனை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும், அவ்வாறு நேரடியாக பெறப்படும் விண்ணப்பங்களை சிறப்பினமாக கருதி, அவ்விடுதியில் அனுமதிக்கப்பட்ட மாணாக்கர்களின் எண்ணிக்கையில் காலிப்பணியிடம் இருக்கும் பட்சத்தில், அவர்களையும் விடுதியில் தங்கி கல்வி பயில மேற்படி குழுவிடம் ஒப்புதல் பெற்று, அனுமதி ஆணை வழங்கப்பட வேண்டும், அவ்வாறு அனுமதிக்கப்பட்ட மாணாக்கரின் விவரங்களை இணைய வழியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராவ் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.


வழிகாட்டு நெறிமுறைகள் :


4-ஆம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணாக்கர்(85%), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பின மாணாக்கர் (10%), பிற வகுப்பினர் (5%) என்ற விகிதத்தில் தேர்வு செய்யப்படும்.


பள்ளிக்கும் வீட்டிற்குமான தொலைவு 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும், மாணவியருக்கும், பெற்றோரை இழந்த மாணவர்கள் மற்றும் தாய் தந்தை வெளியூர்களில் பணிபுரிந்து பாதுகாவலர் பொறுப்பில் இருக்கும் மாணவர்களுக்கும் மேற்படி நிபந்தனை பொருந்தாது.


பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


மாணாக்கருக்கு கல்வி பயிலும் பள்ளி தலைமை ஆசிரியர்/கல்லுாரி முதல்வரின் சான்று இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.( பள்ளி மாணாக்கருக்கு EMIS எண் மற்றும் கல்லூரி மாணக்கர்களுக்கு மத்திய மாநில அரசால் கல்வி உதவி தொகை பெறுவதற்காக இணையத்தின் மூலம் வழங்கப்படும் பதிவு எண் இடம் பெற்றிருக்க வேண்டும்)


குறிப்பு :


SC, Minority வகுப்பின மாணாக்கருக்கு மத்திய அரசால் இணையத்தின் மூலம் வழங்கப்படும் NSP எலர் மற்றும் அதர வகுப்பின மாணக்கருக்கு மாநில கல்வி உதவிதொகை பெறுவதற்கான இணையத்தின் மூலம் வழங்கப்படும் பதிவு எண் இடம் பெற்றிருக்க வேண்டும். விடுதியில் தங்கி கல்வி பயில தெரிவு செய்யப்படும் மாணாக்கர் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் விடுதியில் உள்ள பொருட்களை சேதப்படுத்தினாலோ அல்லது விடுதிக் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டாலோ அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், மேலும் அதற்குண்டான கட்டணம் செலுத்த வேண்டும். எனவும் உறுதி மொழிப் பத்திரம் பெறப்பட வேண்டும்.


பள்ளி மாணவ/மாணவியர் விடுதிகளுக்கு விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கும் கடைசி நாள். 20.07.2022.


கல்லூரி மாணவ/மாணவியர் விடுதிகளுக்கு விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கும் கடைசி நாள்.05.08.2022. எனவே சென்னை மாவட்டத்தில் கல்வி பயின்று வரும் மாணவ/மாணவியரகள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையுமாறு சென்னை மாவட்ட  ஆட்சித்தலைவர் சு.அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி