காய்ச்சலால் உங்க பிள்ளைங்க பள்ளிக்குப் போகலையா? இதுதான் காரணமாம்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 6, 2022

காய்ச்சலால் உங்க பிள்ளைங்க பள்ளிக்குப் போகலையா? இதுதான் காரணமாம்!

 


தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம், கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகும் நிலையில், ஒரு வகுப்புக்கு 3 - 4 பிள்ளைகளுக்குக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது பெற்றோருக்கு கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.


பள்ளிகள் திறக்கப்பட்டு சில குழந்தை ஒரு வாரம் தான் சென்றிருப்பார்கள். அதற்குள் வயிற்று வலி அல்லது காய்ச்சல் அல்லது சளித் தொல்லை. இதனால் அச்சமுற்ற பெற்றோர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துக் கொள்கிறார்கள். 


சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய சோதனையில், ஒவ்வொரு வகுப்பறையிலும் 3 முதல் நான்கு பிள்ளைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக துவக்கப்பள்ளி வகுப்புகளில்தான் இது அதிகமாக இருக்கிறது.


பள்ளிகளில் குழந்தைகள் முழு நேரமும் முகக்கவசம் அணிந்திருக்கும்படி வலியுறுத்த முடியவில்லை, பாடங்களைப் படிக்கும் போது அது அவர்களுக்கு அசௌகரியமாக இருக்கலாம். பள்ளிகளில் வகுப்புகளை சிறியவை. அதனையால் சமூக இடைவெளியையும் பின்பற்றுவது சிரமம் என்பது பள்ளி நிர்வாகங்கள் கூற்றாக உள்ளது.


ஒரு பக்கம் கரோனா அதிகரித்துக் கொண்டே வருகிறது என்ற தகவல் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு கலக்கத்தை ஏற்படுத்துகிறது.


இது குறித்து சுகாதாரத் துறையினர் கூறுகையில், பொதுவாக இதில் கவலைப்பட ஒன்றுமில்லை. வழக்கமாக மழைக்கால தொடங்கும் போது வரும் காய்ச்சலாகத்தான் இருக்கும். ஆனால், பள்ளிகளில் காய்ச்சல் அதிகரிப்பதால், பள்ளி வளாகங்களிலேயே காய்ச்சல் சிறப்பு முகாம்களை சுகாதாரத் துறை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல குடியிருப்புப் பகுதிகளிலும் அதனை நடத்தலாம் என்கிறார் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலாளர் பி. பாட்ரிக் ரெய்மண்ட்.


சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறுகையில், வழக்கமாக குழந்தைகள் வெளியே வரும் போது, பல்வேறு சூழல்கள் மற்றும் சக பிள்ளைகள் மூலமாக ஏராளமான வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் தொற்று ஏற்பட்டு, அதற்கு எதிராக உடல் போராடும் போது இயற்கையாகவே நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பிள்ளைகள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்துவிட்டதால், அவர்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பாற்றால் குறைந்துவிட்டது என்ற அதிர்ச்சித் தகவலையும் தெரிவிக்கிறார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி