கலை கல்லூரி அட்மிஷன் விண்ணப்பிக்க இன்று கடைசி - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 7, 2022

கலை கல்லூரி அட்மிஷன் விண்ணப்பிக்க இன்று கடைசி

 தமிழகம் முழுதும் 163 அரசு கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். 


தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு ஜூன் 20ல் வெளியான நிலையில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகளில் சேரும் வகையில், கல்லுாரி கல்வி இயக்குனரகம் வழியே, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலையில் சேர விரும்புவோர், https://tngasa.in/# என்ற இணையதளம் வழியே, விண்ணப்ப பதிவு செய்து வருகின்றனர். 


நேற்று வரை 3.15 லட்சத்துக்கு மேற்பட்டோர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். அவர்களில், 2.70 லட்சம் பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.இந்நிலையில், இந்த விண்ணப்ப பதிவுக்கு இன்று கடைசி நாள் என்பதால், மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை விரைந்து பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம், மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு, இன்னும் பிளஸ் 2 தேர்வு முடிவு வராததால், அவர்களுக்காக கூடுதல் அவகாசம் தரப்படும் என, பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி