கணக்கு அலுவலர் நிலை- III பதவி: TNPSC அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2022

கணக்கு அலுவலர் நிலை- III பதவி: TNPSC அறிவிப்பு

தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணிகளில் அடங்கிய கணக்கு அலுவலர் நிலை-III பதவிக்கான காலியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதிவிக்கான தேர்வு கணினி வழித் தேர்வாக நடத்தப்படும். 


விளம்பர எண். 618  அறிவிக்கை எண். 14 / 2022


பதவி: கணக்கு அலுவலர் நிலை - III


தகுதி: சிஏ முடித்திருக்க வேண்டும்.


காலியிடங்கள்: 23


சம்பளம்: மாதம் ரூ.56,900 - 2,09,200


வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி கணக்கிடப்படும். 


கட்டணம்:  நிரந்த பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். 


தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, நேர்முகத் தேர்வு அமைந்த வாய்மொழித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 


தேர்வு மையம்: கணினி வழித் தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெறும். 


விண்ணப்பிக்கும் முறை:  www.tnpsc.gov.in / www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.08.2022


மேலும் விவரங்கள் அறிய  https://www.tnpsc.gov.in/Document/tamil/AO-%20Tamil%20CBT.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி