School Morning Prayer Activities - 22.07.2022 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 22, 2022

School Morning Prayer Activities - 22.07.2022

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.07.2022

 திருக்குறள் :


குறள் எண் – 989


பால் – பொருட்பால்


இயல் – குடியியல்


அதிகாரம் – சான்றாண்மை


ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு

ஆழி எனப்படு வார்.


விளக்கம்:


சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.


பழமொழி :

He that blows in the dust falls on his own eyes

சேற்றிலே கல்லெறிந்தால் நம்மேல் தான் தெறிக்கும்


இரண்டொழுக்க பண்புகள் :


1. அறிய முடியாததை செய்ய முயல்வதை விட அறிந்ததை மிகச் சிறப்பாக செய் 


2. நாளை செய்ய வேண்டிய காரியம் கூட இன்றே செய்வது வெற்றியின் ஆரம்பம்


பொன்மொழி :


உன்னிடம் பணம் இருந்தால் நீ ஒரு நாயை வாங்கி விட முடியும் ஆனால் அதன் வாலை நீ அசைக்க வைக்க வேண்டுமென்றால் நீ அதனிடம் அன்பை செலுத்தினால்தான் முடியும்.....ரமண மகரிஷி


பொது அறிவு :


1.யானை தினமும் எவ்வளவு தண்ணீர் அருந்தும்? 


200 லிட்டர்


2.பூச்சிகளில் வேகமாகப் பறக்க கூடிய பூச்சி எது? 


தும்பி.


English words & meanings :


cal·cu·lus - a method of calculation. Noun. நுண் கணிதம். பெயர்ச் சொல்

ஆரோக்ய வாழ்வு :


இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சோயா துண்டுகள் நன்மை பயக்கும்.


சோயா துண்டுகளில் உள்ள ஐசோஃப்ளேவோன்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.

NMMS Q 30:


டாஸ்மேனியா ________ தீவு என்று அழைக்கப்படுகிறது? 


விடை: ஆப்பிள்


ஜூலை 22 இன்று


பை நாள்

பை நாள் மற்றும் பை அண்ணளவு நாள் என்பன  என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 14ம் நாள் பை நாளாக கொள்ளப்படுகின்றது. அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஐக் குறிக்கும். இந்த எண், அதாவது 3.14 என்பது அண்ணளவாக  ஐயும் குறிக்கும். இது மார்ச் 14 1:59:26 என்ற குறிப்பிட்ட நேரத்திலும் கொண்டாடப்படுகிறது. (π = 3.1415926).

பை அண்ணளவு நாள் என்பது பல்வேறு நாட்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக இது ஐரோப்பிய நாட்கணக்குகளில் ஜூலை 22 இல் ( யின் பரவலாக அறிந்த அண்ணளவு ) இது கொண்டாடப்பட்டு வருகின்றது. அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளும் மார்ச் 14 இல் வருவது குறிப்பிடத்தக்கது.

 நாள் முதன்முறையாக 1988இல் கலிபோர்னியாவில் உள்ள அறிவியல் நுட்பசாலையான எக்ஸ்புளோடோறியத்தில் கொண்டாடப்பட்டது. அந்நாளில் நுட்பசாலையைச் சுற்றி அலுவலர்களினதும் பொதுமக்களினதும் அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டது. அணிவகுப்பின் முடிவில் பை (Pye) எனப்படும் உணவுப்பண்டம் அனைவருக்கும் பரிமாறப்பட்டு அந்நாள் கொண்டாடப்பட்டது[1]. லாறி ஷோ (Larry Shaw) என்பவர் இந்நாளை அறிமுகப்படுத்தினார்.[2]


நீதிக்கதை


சிங்கமும் கழுதைப்புலியின் பங்கும்


அன்று ஒரு நாள் சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. அடுத்தநாள் சிங்கம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கை வாங்கிவரச் சொன்னது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம். 


கழுதைப் புலியோ, நீ ஏன் குடலை மட்டும் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்கு கேட்கவில்லையா என்று கேட்டது. பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும் என்றது குட்டி கழுதைப்புலி. 


அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஒய்வெடுத்துக் கொண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு ஏன் இங்கே வந்தாய்? என்று கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது. 


பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி பயந்து தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம். 


குடலை சிங்கத்திடம் கொடுத்துவிட்டுதிரும்பிய கழுதைப்புலியிடம் பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்துவிட்டு வருகிறீர்களே? என்று கேட்டது குட்டி கழுதைப்புலி. 


மகனே! சிங்கம் மிகக் கொடூரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கிவிட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டிவிட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக என்றது தாய் கழுதைப்புலி. 


நீதி :

நம்மைவிட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.


இன்றைய செய்திகள் - 22.07.22


44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி:சென்னையிலிருந்து மாமல்லபுரத்திற்கு இலவச பேருந்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இயக்க உள்ளது


 கோவையில் இருந்து சென்னைக்கு முதல் முறையாக தங்கள் சொந்த பயணத்தில் விமானத்தில் பயணம் செய்த 41 மலைவாழ் பழங்குடியினர்


 சென்னை: தமிழகத்தில் 2 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 ஊட்டியில் கனமழை மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.


 குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று நாட்டின் 15 ஆவது குடியரசு தலைவரானார்  திரெளபதி மர்மு.


 சென்னை: சென்னையில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 'காவல் உதவி' செயலியின் பயன்பாடு குறித்து ஒரு நாள் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.


ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் கோலிக்கு 4வது இடம்.


ஆசியக் கோப்பை 2022 கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடிய சூழ்நிலை என இலங்கை அரசு அறிவிப்பு.


Today's Headlines


44th Chess Olympiad: Tamil Nadu Tourism Development Corporation to run free bus from Chennai to Mamallapuram


  41 hill tribes who flew from Coimbatore to Chennai for the first time on their own journey


 Chennai: The Chennai Meteorological Center has said that there is a possibility of widespread rain and heavy rain at a few places in Tamil Nadu for 2 days.


  Heavy rains in Ooty affect the normal life of people.


  Tirelapathi Marmu became the 15th President of the country by getting the most votes in the presidential election.


  CHENNAI: A day-long special awareness program was held in Chennai on the use of the 'Police Help' app in schools, colleges and public gathering places.

 

  I.C.C.  Kohli is ranked 4th in the ranking list.



 Sri Lankan government has announced that they  couldn't host the Asia Cup 2022 cricket tournament due to situation

 

 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி