TNPSC Group 4 Exam - தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது போக்குவரத்துத்துறை..!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2022

TNPSC Group 4 Exam - தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது போக்குவரத்துத்துறை..!!

நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு போக்குவரத்து கழகம் இயக்குகிறது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் வழிகாட்டுதலின்படி தேர்வு மைய எண்ணிக்கைக்கு ஏற்ப நாளை சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் சிறப்பு பேருந்துகள் முறையாக நின்று செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கண்காணிப்பர் எனவும் போக்குவரத்துத்துறை தெரிவித்திருக்கிறது. குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 7301 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நாளை நடக்கிறது.


இத்தேர்வை 22 லட்சம் பேர் எழுதுகின்றனர். காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடக்கிறது. பகுதி 1ல் கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்பட்டு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். பகுதி 2ல் பொது அறிவு தேர்வில் 100 வினாக்கள் கேட்கப்பட்டு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். மொத்தம் 200 கேள்விகளுக்கு மொத்தம் 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். இத்தேர்வு 38 மாவட்டங்களில் 316 தாலுகாக்களில் நடைபெறுகிறது. மொத்தம் 7,689 மையங்கள் தேர்வு எழுதுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் குரூப் 4 பதவிக்கு 22 லட்சம் பேர் வரை எழுதுவது இதுவே முதன்முறை என்பது நினைவுகூரத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி