ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள், நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியதை அடுத்து, வரும் 5ம் தேதி நடக்கவிருந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்பரசு, தியாகராஜன் உட்பட, 16 பேர், நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினர். பின், அவர்கள் அளித்த பேட்டி: நீண்ட நேரம் ஒதுக்கி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பிரச்னைகளை முதல்வர் கேட்டறிந்தார். நீண்ட நாள் கோரிக்கைகளை எடுத்துரைத்தோம். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி உயர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும். ஊராட்சி செயலர், ஊர்ப்புற நுாலகர்கள், சிறப்பாசிரியர்கள் ஆகியோரை, காலமுறை ஊதியம் கீழ் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கூறினோம். விரைவில் பரிசீலித்து முடிவு அறிவிப்பதாக முதல்வர் தெரிவித்தார்.
ஜாக்டோ - ஜியோ மாநாட்டில் பங்கேற்க, முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். விரைவில் தேதி தருவதாக கூறியுள்ளார். அதற்கு நன்றி தெரிவித்தோம். இந்த சந்திப்பு, எங்களின் கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். முதல்வருடனான சந்திப்பை தொடர்ந்து, வரும் 5ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடத்த திட்டமிட்டிருந்த, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஒத்தி வைப்பதாக, ஜாக்டோ - ஜியோ அமைப்பு அறிவித்தது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி