ஜாக்டோ ஜியோவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2022

ஜாக்டோ ஜியோவின் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு

 

அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவான 'ஜாக்டோ ஜியோ' அமைப்பு, புதிய பென்ஷன் திட்டம் ரத்து, காலிப்பணியிடம் நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியறுத்தி போராடி வருகிறது. இந்த அமைப்பின் சார்பில் முக்கிய வலியுறுத்துதல்கள் பலவும் நிலுவையில் இருப்பதால், அரசின் கவனத்தை ஈர்க்க சென்னை தீவுத்திடலில் செப்.10ல் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


இதில் தேர்தல் காலங்களில் முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகளை நினைவுபடுத்தி, அவற்றை நிறைவேற்ற வலியுறுத்துவது என முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து லட்சக்கணக்கானோரை திரட்டி பலத்தை காட்டுவது என செயல்படுகின்றனர். இந்த மாநாட்டுக்கு, 'வாழ்வாதார நம்பிக்கை மாநாடு' என பெயர் சூட்டியுள்ளனர்.


ஒருங்கிணைப்பாளர் செல்வம் கூறுகையில், ''மாநாட்டில் லட்சக்கணக்கில் திரள்வது என முடிவெடுத்துள்ளோம். இதற்காக ஒருங்கிணைப்பாளர்கள், மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் சென்னையில் ஆலோசனை நடத்தினோம். மாநாட்டில் பங்கேற்க முதல்வர் உறுதியளித்துள்ளார். கோரிக்கைகள் தொடர்பாகவும், பங்கேற்க வலியுறுத்தியும் கல்வி அமைச்சரையும் சந்தித்து கடிதம் வழங்கியுள்ளோம்' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி