தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி - பள்ளி கல்வி ஆணையரின் செயல்முறைகள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 6, 2022

தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி - பள்ளி கல்வி ஆணையரின் செயல்முறைகள்
2022-2023 ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது , மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் , பள்ளிக்கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல் சார்ந்து வெளியிட்ட அறிவிப்பில் , பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் இணை இயக்குநர்கள் , முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் என சுமார் 12,000 பேருக்கு நாட்டின் தலை சிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் உதவியுடன் பணித்திறன் மேம்பாடு , தலைமை திறன் , மேலாண்மை ஆகிய பொருண்மைகளில் ஆண்டுதோறும் உள்ளுறை பயிற்சி ( Residential Training ) அளிக்கப்படும் “ என்று தெரிவித்தன் அடிப்படையில் , 2022-2023ஆம் கல்வி ஆண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.


 முதற்கட்டமாக , தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி அளிப்பதற்கான முதன்மை கருத்தாளர் பயிற்சி 22.08.2022 முதல் 27.08.2022 வரை விருதுநகர் மாவட்டம் , இராஜபாளையம் வேங்கநல்லூரில் உள்ள ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியில் ( Ramco Institute of Technology ) நடைபெறவுள்ளது.


இதன்பொருட்டு , இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள தலைமை ஆசிரியர்களை வளாகத்திலேயே தங்கி பயிற்சியில் கலந்து கொள்ள ஏதுவாக , அவர்களை பணியிலிருந்து விடுவித்தும் , பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களை தங்களது மடிக்கணினியுடன் 21.08.2022 அன்று மாலை 7.00 மணிக்குள் பயிற்சி வளாகத்திற்கு வந்து பதிவு தலைமை செய்யுமாறும் , மாவட்ட அறிவுறுத்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , பயிற்சி சார்ந்த விவரங்களுக்கு திரு.பி.சிவசக்தி கணேஷ்குமார் ( கைப்பேசி எண் .9442570306 , 9345570306 ) உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ( ADPC ) முதன்மைக் கல்வி அலுவலகம் , விருதுநகர் என்பவர் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி