இ-சேவை மையங்கள் மூலமாக சான்றிதழ் வழங்குதல் - PSTM (தமிழ் வழியில் படித்த சான்று) சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களின் சரிபார்த்தல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 16, 2022

இ-சேவை மையங்கள் மூலமாக சான்றிதழ் வழங்குதல் - PSTM (தமிழ் வழியில் படித்த சான்று) சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களின் சரிபார்த்தல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!இ - சேவை மையங்கள் மூலம் PSTM சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் சேவையை பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது . இ - சேவை மையங்கள் விண்ணப்பங்கள் பள்ளிக்கல்வி மாநிலத்திட்ட மூலம் இதுவரை பெறப்பட்ட வாயிலாக மின்னஞ்சல் மூலம் சார்ந்த முதன்மை கல்வி இயக்ககத்தின் அலுவலர்களுக்கு அனுப்பப்படுகின்றன.


அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு இது சார்ந்த வழிகாட்டுதல்களை வழங்கவும் , பெறப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


 பள்ளியில் பராமரிக்கப்படும் பதிவேடுகளின் அடிப்படையில் விண்ணப்பதாரரால் சமர்ப்பிக்கப்பட்ட விவரங்களின் நம்பகத்தன்மையை தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் . மேலும் விண்ணப்பதாரர் வழங்கிய தகவல் சரியானது என உறுதிப்படுத்தப்பட்டால் , அவர்களுக்கு அரசாணை ( நிலை ) எண் .82 , மனிதவள மேலாண்மைத் ( எஸ் ) துறை , நாள் . 16.08.2021 - ன் படி PSTM சான்றிதழுக்காக வழங்கப்பட்டுள்ள 1Format- ல் சான்று வழங்கலாம் . விண்ணப்பதாரர் வழங்கிய தகவல் தவறானது என்று தலைமை ஆசிரியர் கண்டறிந்தால் , தலைமை ஆசிரியர் உரிய காரணத்துடன் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும்.


 தலைமை முதன்மைக் கல்வி அலுவலர்கள் , அந்தந்த மாவட்டங்களில் உள்ள EMIS இன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து செயல்படவும் , இப்பணியைத் ஆசிரியர்கள் சிறப்பாக செய்வதைக் கண்காணிக்கவும் தலைமை அறிவுறுத்தப்படுகிறார்கள்.

PSTM விண்ணப்பத்தின் நிலையை அவ்வப்போது கண்காணிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள Google Sheet- ல் EMIS இன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உடனுக்குடன் பதிவிட வேண்டும் . எனவே , PSTM விண்ணப்பங்களின் நாளது தேதி வரையிலான விவரத்தினை மேற்குறிப்பிட்டுள்ள Google Sheet- ல் ஆகஸ்ட் 12 , 2022 க்குள் முடிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி