காலாண்டு தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது.. தலைமையாசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்..! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Sep 30, 2022

காலாண்டு தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது.. தலைமையாசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்..!


ராமநாதபுரம் மாவட்டம்  ஆர்.எஸ்.மங்கலம் அருகே காலாண்டு தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது தொடர்பாக தலைமையாசிரியர் உள்ளிட்ட 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

ஏ.மணக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 6,7,8 ஆம் வகுப்புகளுக்கான அறிவியல் பாட காலாண்டு தேர்வு முன்கூட்டியே வெளியான தகவல் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டார்.

அப்போது, பள்ளியின் தலைமையாசிரியர் வினாத்தாளை அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியரிடம் வழங்கியதும், அவர் அதனை தேர்வுக்கு முதல்நாளே மாணவர்களிடம் வழங்கி படித்து வரச் சொல்லி இருப்பதும் தெரிய வந்தது. மேலும் இந்த வினாத்தாளை பட்டதாரி கணித ஆசிரியர் படம் பிடித்து வெளியிட்டதும் தெரிய வந்தது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி