அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை கலை பண்பாட்டு செயல்பாடுகள் கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2022

அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை கலை பண்பாட்டு செயல்பாடுகள் கட்டாயம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

 

அரசு பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு வரை கலை பண்பாட்டு செயல்பாடுகள் கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 6 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளி கால அட்டவணைகளில் கலை, பண்பாட்டு செயல்பாடுகள் முதன்முறையாக இணைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் வாரத்தில் இரு பாடவேளைகள் கலை, பண்பாட்டு செயல்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இசை, நடனம், காட்சிக்கலை, நாடகம், நாட்டுப்புற கலை ஆகிய 5 கலைச்செயல்பாடுகளில் மாணவர்கள் ஒன்றை தேர்வு செய்யலாம்.


கலை, பண்பாட்டு செயல்பாடுகளை பயிற்றுவிக்க பள்ளிகளுக்கு அருகே உள்ள கலைஞர்களை ஈடுபடுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியும் கலை பண்பாட்டு செயல்பாடுகளுக்கு பொறுப்பாசிரியரை நியமிக்க வேண்டும். கலை, பண்பாட்டு செயல்பாடுகளில் சிறந்து விளக்கும் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. முதல்வர் மு.க ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் பகுதி நேர ஆசிரியர்களை "பணி நிரந்தரம்" செய்து அரசு ஆணை வழங்கினால் எல்லாம் இன்னும் நல்லா சிறப்பாக செய்வோம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி