இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம்: உயர்கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Sep 1, 2022

இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் பாடம் கட்டாயம்: உயர்கல்வித்துறை

 

அனைத்து வகை கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2-ஆவது செமஸ்டர் தேர்வில் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் பிளஸ் 2 வகுப்புகளில் உருது, பிரெஞ்சு படித்த மாணவர்கள், தமிழ் கற்க வேண்டிய கட்டாயமாகிறது. 


தாய் மொழியான தமிழ் மொழியினை மாணவர்கள் அனைவரும் கற்க வேண்டும் எனவும், தாய் மொழியில் கல்வி கற்பதை ஊக்குவிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு மாணவர்களை ஊக்குவித்து வருகிறது.


புகார்: ஆனால், சில கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தமிழ் மொழி பாடத்தை நடத்தவில்லை என தகவல்கள் வெளியானதை அடுத்து அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் இளங்கலை பட்டப்படிப்புகளில் தமிழ் மொழி கட்டாயம் என உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.


இதுதொடர்பாக உயர்கல்வித்துறை விடுத்துள்ள உத்தரவில், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2 ஆவது செமஸ்டர் தேர்வில் தமிழ் மொழி பாடம் கட்டாயம். 


விலக்கு

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி பாடத்திற்கான தேர்வுகளை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


அனைத்து வகை கல்லூரி, பல்கலைக்கழகங்களில் 2-ஆம் ஆண்டு செமஸ்டர் தேர்வில் தமிழ்மொழி தேர்வு கட்டாயம் இடம்பெற வேண்டும். அதற்காக தமிழ் மொழி பாடத்திட்டங்களை சரிவர பல்கலைக்கழகங்கள் தேர்வு செய்து முறைப்படுத்தி தமிழ் தேர்வுகளை நடத்த வேண்டும்.


சில கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தமிழ் மொழி பாடத்தை நடத்தவில்லை என்று வந்துள்ள தகவலை அடுத்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அனைத்து பல்கலைக்கழகங்கள் கல்லூரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

4 comments:

  1. 2017 தாள் இரண்டில் சான்றிதழ் சரிபார்க்க பட்டவர்களுக்கு என்று ஒரு குழு தொடங்கப்பட்டு உள்ளது... எனவே தாங்கள் தொலைபேசி எண்ணை பாடத்துடன் பதிவிடுமாறு கேட்டு கொள்கிறோம்...

    ReplyDelete
  2. தாள் 1ம் பதிவிடுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி