பாடம் நடத்தாமல் மெத்தனம் அரசுப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சஸ்பெண்ட் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Sep 26, 2022

பாடம் நடத்தாமல் மெத்தனம் அரசுப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சஸ்பெண்ட்

 

சேலம் அடுத்த எருமாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக செந்தில்குமார் உள்ளார். இவர் பாடம் நடத்தாமல் மெத்தனமாக இருந்ததாக புகார் எழுந்தது. பள்ளிக்கு நேரடியாக சென்ற சிஇஓ முருகன் விசாரணை நடத்தி செந்தில்குமாரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘எருமாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்புகளுக்கு செல்லும் பட்டதாரி ஆசிரியர் செந்தில்குமார், மாணவர்களுக்கு சரிவர பாடம் நடத்தாமல் மெத்தனமாக இருந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கேட்டபோது, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார். மேலும், வெளிஆட்கள் மூலம் மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. இதனையடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து சிஇஓ உத்தரவிட்டுள்ளார்,’ என்றனர்.

2 comments:

  1. Replies
    1. ௳ன்னை பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கவேண்டும்.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி