தலைமை ஆசிரியர்களுக்கு முதற்கட்ட தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Sep 2, 2022

தலைமை ஆசிரியர்களுக்கு முதற்கட்ட தலைமைப் பண்பு பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.


2022-23 ஆம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது , மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பள்ளிக் கல்வி அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்தல் சார்ந்து வெளியிட்ட அறிவிப்பில் ,


 " பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் இணை இயக்குநர்கள் , முதன்மைக் கல்வி அலுவலர்கள் , மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் என சுமார் 12,000 பேருக்கு நாட்டின் தலைசிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் உதவியுடன் பணித்திறன் மேம்பாடு , தலைமைத்துவம் , மேலாண்மை ஆகிய பொருண்மைகளில் ஆண்டுதோறும் உள்ளுறை பயிற்சி ( Residential Training ) அளிக்கப்படும் " என்று தெரிவித்ததன் அடிப்படையில் , 2022-23 ஆம் கல்வியாண்டின் இறுதிக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்புப் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு , முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சி முடிவடைந்த நிலையில் தலைமை ஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக தலைமைப் பண்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


HMs Training Proceedings - Download here....


Training HMs List - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி