மாவட்டக் கல்வி அலுவலர்கள் மாறுதல் / பதவி உயர்வு மற்றும் புதிய மாவட்டக் கல்வி அலுவலகம் விபரம் - அரசாணை மற்றும் பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Sep 30, 2022

மாவட்டக் கல்வி அலுவலர்கள் மாறுதல் / பதவி உயர்வு மற்றும் புதிய மாவட்டக் கல்வி அலுவலகம் விபரம் - அரசாணை மற்றும் பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!


2022-2023 ஆம் ஆண்டுக்கான மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு பதவி உயர்வு / பணிமாறுதல் மலம் நியமனம் வழங்கப்பட ஏதுவாக தற்காலிக தேர்ந்தோர் பெயர்ப் பட்டியல் ஏற்பளித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

 மேற்காணும் அரசாணை இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. இதில் இடம் பெற்றுள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்களுக்கு 01.10.2022 அன்று கலந்தாய்வு நடை பெறவுள்ளது . எனவே , மேற்கண்ட அரசாணையில் இடம் பெற்றுள்ள தலைமையாசிரியர்கள் தங்களது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் 01.10.2022 அன்று காலை 11 மணி அளவில் கலந்தாய்வில் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


கலந்தாய்வில் கலந்து கொள்ளாத தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி ஆணையரால் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.


அரசாணை -171 & 172 - Download here


1 comment:

  1. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி 8 வருடங்கள் ஆகிறது. வருடாவருடம் பதவி உயர்வு மட்டும் வைத்து நிரப்பி வருகிறது கல்வித்துறை. டெட் தேர்ச்சி பெற்ற, சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட இவர்களை இன்னும் கடந்த ஆட்சியில் இருந்தது போல் நடுத்தெருவில் நிற்க வைத்து வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்குகிறீர்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி