பள்ளி துணை ஆய்வாளர் பதவிகளை மீண்டும் ஏற்படுத்திட கோரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2022

பள்ளி துணை ஆய்வாளர் பதவிகளை மீண்டும் ஏற்படுத்திட கோரிக்கை


மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு வணக்கம்

~~~~~

கடந்த 65 ஆண்டுகளுக்கு மேலாக  பட்டதாரி ஆசிரியர்களை பள்ளித் துணை ஆய்வாளராக  துறை தேர்வில் தேர்ச்சி பெற்று பணி மாறுதல் மூலம் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணியாற்றி வருகின்றனர்.. இந்நிலையில் 101, 108 ஆணைகளை ரத்து செய்துவிட்டு,  நீண்டநாள் கோரிக்கையை ஏற்று அரசாணை151 ன்படி தொடக்கக் கல்விக்கு  மாவட்டக் கல்வி அலுவலர்,  உயர்நிலை மேனிலைப்பள்ளுக்கென  மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் தனியார் சுயநிதி ( மெட்ரிக் ) பள்ளிகளுக்கு ஒரு மாவட்டக் கல்வி அலுவலர் என தனித்தனியாக பிரித்து பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது..

இதன் தொடர்ச்சியாக தற்போது இருக்கின்ற மாவட்டக் கல்வி அலுவர்களுக்கு பூஜியம் கலந்தாய்வு நடத்தி தொடக்கக்கல்விக்கு தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களை நியமித்துள்ளது அரசு.


இதற்கு இடையில் ஏற்கனவே மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பள்ளிக்கல்வித்துறைக்கும் பொது மக்களுக்கும் பாலமாய் பணிபுரிந்துவரும்  31 பள்ளித்துணை ஆய்வாளர்‌  பணியிடங்களை ஒப்படைப்பு செய்து இருப்பது வருத்தத்தையும் வேதனையும்  ஏற்படுத்தி உள்ளது..

பள்ளித்துணை ஆய்வாளர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்து அனைத்து பணிகளையும் திறம்பட செய்யக் கூடியவர்கள் ஆதலால்  தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலகத்திற்கும் பள்ளிகள் துணை ஆய்வாளர் பணியிடம் கட்டாயம் தேவைப்படுகிறது...

31 பணியிடங்களையும் ஒப்படைப்பு செய்யாமல் அவர்கள் அனைவரையும் மெட்ரிக் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணியாற்றும் விதமாக பணியிடத்தை ஏற்படுத்தி மீண்டும் அவர்களை நியமனம் செய்து பட்டதாரி ஆசிரியர்களின் நீண்டநாள் உரிமையை மீண்டும் நிலைநாட்டி உதவிட பள்ளிக்கல்வித்துறையின் மாசற்ற மாணிக்கம் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும் , மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் அவர்களையும், மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களையும் பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்

~~~~~~~

 சா.அருணன்

நிறுவனத் தலைவர்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு.

1 comment:

  1. எந்த விதிமுறைகளையும், அதாவது, பணிமூப்பு,
    பணிதிறன் இப்படி எதற்கும்
    முக்கியத்துவம் கொடுக்காமல்
    தான் பள்ளி துணை ஆய்வாளர்
    பணியிடங்கள் நிரப்ப பட்டு உள்ளன,தற்போது பணிபுரிபவர்கள் இவ்வாறே
    செல்வாக்கு,
    பின்புலம் ...m

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி