பரவும் காய்ச்சல் - நாளை முதல் 25ம் தேதி வரை 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2022

பரவும் காய்ச்சல் - நாளை முதல் 25ம் தேதி வரை 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை!


புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை முதல் 25ம் தேதி வரை 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக பல்வேறு காரணங்களால் 50 சதவீத குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. பல குழந்தைகள் காய்ச்சல், சளி, இருமல் அதிகமாகி உள்ளது. இந்த பாதிப்பு காரணங்களால் மருத்துவமனையில் குழந்தைகள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காய்ச்சல் பாதிக்கப்பட்ட் குழந்தைகள் உடன் மற்ற குழந்தைகள் தொடர்பில் இருப்பதால் அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. காய்ச்சல், சளி அறிகுறிகள் இருக்கும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று ஏற்கனவே பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதனிடையே 1 முதல் 8 வரையிலான வகுப்புகளை மூட அரசுக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை முதல் 25ம் தேதி வரை 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்விதுறை அமைச்சர் நமச்சிவாயம்உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி காலாண்டு தேர்வு 26ம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதனால் தான் 25-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயம் அறிவிக்கப்பட்டுள்ளது, அதிக கட்டண வசூலை கண்காணிக்க  கண்காணிப்பு குழு உள்ளது எனவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி