தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு - விண்ணப்பங்கள் திருத்தங்களை மேற்கொள்ள வாய்ப்பு. - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Sep 14, 2022

தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு - விண்ணப்பங்கள் திருத்தங்களை மேற்கொள்ள வாய்ப்பு.

01.10.2022 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறவிருக்கும் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றம் செய்ய 09.09.2022 மற்றும் கட்டணத்தொகை செலுத்துவதற்கான கடைசி நாள் 10.09.2022 என தெரிவிக்கப்பட்டது.


 தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்விற்கு பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களின் புகைப்படம் / வகுப்பு ( Community ) ஆகியவற்றில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் திருத்தங்களை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக 13.09.2022 பிற்பகல் 02.00 மணி முதல் 14.09.2022 பிற்பகல் 05.00 வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்ற விவரத்தினைத் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி , மெட்ரிக் பள்ளி , ஆங்கிலோ இந்தியன் மற்றும் CBSE / ICSE பள்ளிகளுக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி