TNTET - தாள்-1க்கான தேர்வு நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 3, 2022

TNTET - தாள்-1க்கான தேர்வு நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைப்பு!

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1க்கான தேர்வு நிர்வாகக் காரணங்களால் ஒத்தி வைக்கப்படுகிறது - TRB அறிவிப்பு!!!

ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் நாள் தேர்வு நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு 2022ம் ஆண்டுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. இணைய வழி வாயிலாக விண்ணமங்கள் பெறப்பட்ட நிலையில்., 6 லட்சத்து 3 ஆயிரம் பேர் விண்ணப்பித்து காத்திருந்தனர். ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1 செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பொதுவாக, தேர்வுக்கு 7 நாட்களுக்கு முன்பாக எந்த மாவட்டத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரமும், 3  நாட்களுக்கு முன்பாக தேர்வு மையத்தின் விவரமும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும். தாள்- I தேர்வு தொடங்க இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், அனுமதிச் சீட்டு தொடர்பான அறிவிப்பு இன்று  வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  இந்நிலையில் நிர்வாக காரணங்களுக்காக ஆசிரியர் தகுதித்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இத்தேர்வுக்காக B.Ed இறுதியாண்டு மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் உட்பட 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து காத்திருந்தனர். இந்நிலையில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பித்து காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 



7 comments:

  1. நிர்வாகக் காரணம் என்ற வார்த்தைகளை வைத்தே இன்னும் ஒரு வருடம் கடத்தி விடுவீர்கள் போல.. TRB WORST BUT TNPSC GENUINE...

    ReplyDelete
  2. ஆட்சிக்கு வந்தால் எல்லாம் செய்து முடித்து

    ReplyDelete
  3. 2013 ல் தேர்ச்சி பெற்றவர்கள் இருக்கும் வரை யாருக்குமே பணி நியமனம் கிடையாது... சுயநலம் பிடித்த பேய்கள்.... ஆக அனைவருமே நியமனத் தேர்வுக்கு தயார் ஆவது நல்லது... ஏனெனில் 2013 தேர்வர்கள் தங்களுக்கு மட்டுமே பணி வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைக்கின்றனர்.. ஆனால் அவ்வாறு செய்ய முடியாது என்பதை அனைவரும் அறிந்ததே...‌

    ReplyDelete
  4. Government not ready to fill vacant post, simply through TRB they are cheating not only teachers also arts and science college asst prof post filling. Govt has no funds to give salary. They know how to fill their pockets taking contracts

    ReplyDelete
  5. Ne exam vaika venanda loosu p....

    ReplyDelete
  6. சுடலை ஸ்டாலின் விடியாத அரசு மக்களும் படித்த பட்டதாரி ஆசிரியர்களும் உங்களுக்கு வாக்களித்ததை எண்ணி வருத்தப் படுகிறோம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி