நிர்வாக சீரமைப்பில் சிக்கிய 10 ஆயிரம் ஆசிரியர்கள் சம்பளத்தில் சிக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2022

நிர்வாக சீரமைப்பில் சிக்கிய 10 ஆயிரம் ஆசிரியர்கள் சம்பளத்தில் சிக்கல்

கல்வித்துறை நிர்வாக சீரமைப்பால் மாற்றியமைக்கப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கான (டி.இ.ஓ.,) ஐ.எப்.எச்.ஆர்.எம்., மென்பொருள் 'அப்டேட்' செய்யப்படாததால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் அக்டோபர் சம்பளம் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

மாநிலத்தில் முன்பிருந்த டி.இ.ஓ.,க்கள் அலுவலகங்கள் தற்போது 55 டி.இ.ஓ.,, 57 டி.இ.இ.ஓ., (தொடக்க கல்வி), 39 தனியார் பள்ளி டி.இ.ஓ., அலுவலகங்களாக மாற்றியமைக்கப்பட்டது. இதில் முன்பிருந்த ஆயிரக்கணக்கான பள்ளிகளின் அமைவிடம் பிற டி.இ.ஓ.,க்கள் எல்லைக்குள் மாறியுள்ளன. இதனால் ஏற்கெனவே புதிய அலுவலகங்கள் கிடைப்பதில் திண்டாட்டம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது சம்பளம் பெறும் ஐ.எப்.எச்.ஆர்.எம்., மென்பொருள் 'அப்டேட்' ஆகாததால் உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் இம்மாதம் சம்பளம் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் மதுரை மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது:

டி.இ.ஓ., அலுவலகங்களுக்கு கீழ் உள்ள அனைத்து அரசு உயர், மேல்நிலை பள்ளிகளுக்கு அந்தந்த தலைமையாசிரியரே சம்பளம் அனுமதிக்கும் (டிராயிங்) அதிகாரி. ஆனால் உதவிபெறும் பள்ளிகளுக்கு சம்பந்தப்பட்ட டி.இ.ஓ.,க்களே அதிகாரி. அக்.,1 முதல் சீரமைப்பிற்கு பின் பள்ளிகள் எந்த டி.இ.ஓ.,க்களுக்கு கீழ் வருகின்றன என்ற குழப்பம் இன்னும் நீடிக்கிறது.

மாநில அளவில் மதுரை உட்பட பல டி.இ.ஓ.,க்களுக்கு எல்லை குழப்பங்கள் உள்ளதால் மாநில அளவில் 80 சதவீதம் ஆசிரியர்கள் இந்தாண்டு தீபாவளி முன்பணம் கூட பெற முடியவில்லை. தற்போது ஐ.எப்.எச்.ஆர்.எம்., சாப்ட்வேரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் உடன் தலையிட்டு சம்பள பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும் என்றார்.

1 comment:

  1. 2012 ல இருந்து இதுவரைக்கும் 5முறை tet தேர்வு நடந்து முடிஞ்சிஞ்சுது.... இதுல pass பண்ண முடியல என்றால் நீங்க இந்த வேலைக்கு சரிப்பட்டு வர மாட்டிங்க

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி